பக்கம்:நாவுக்கரசர்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ப்பும் 9.

அதைப் பெயர்த்தெறியவும் முனைகின்றான். அப்பொழுது உமையம்மை அஞ்சியதுபோல் இறைவனை நோக்க, பரம் பொருளான கயிலை மலையப்பன். புன்னகை பூத்துத் தம் திருவடியின் விரல் நுனியால் மெல்ல ஊன்ற, மலையடியில் அகப்பட்டுச் சிக்கிய தசமுகனின் முடிகளும் தோள்களும் நைந்து நெரிபடுகின்றன. இராவணன்18 வாய்விட்டு அலறு கின்றான்.

இராவணன் அரற்றிக் கொண்டிருத்தலை வாகீச முனிவர் காண நேரிடுகின்றது. அவன் படும் துன்பத்தைக் கண்டு மனம் இரங்குகின்றார். ‘சாமவேதம் ஒதின் சங்கர னார் அருள் பெற்றுய்யலாம்’ என்று வழி கூறுகின்றார். இராவணன் தன் உறுப்புகளைக்கொண்டு வீணை அமைத்து கண்ணுதலப்பன் உள்ளம் குளிர சாமவேதம் பாடுகின்றான். இறைவனும் அவன் நிலைக்கு இரங்கி வாளும் முக்கோடி வாணாளும் ஈந்து வரம் அருளுகின்றார்.14

இராவணன் செய்த குற்றத்திற்கு அவன் எவ்வளவு காலத்திற்கு எத்தகைய துன்பத்தைப் புசிக்க வேண்டும் என்று அறியாமல் வாகீசமுனிவர் இறைவன் ஆணைக்கு மாறாக அவனுக்குத் தவறான வழிகாட்டியதால், அவன் அநுபவித்து எஞ்சிய துன்பத்தை நீ அநுபவித்து எம்மை அடைவாயாக’ என்பது இறைவனின் கட்டளையாக அமைகின்றது. இதனால்தான் வாகீசர் இப்பூவுலகில் மருள் நீக்கியாராகத் தோன்றிச் சூலை நோயால் துன்புற்றார் என்று பொருத்தமாகக் கதை புனைவர்.

இவரைப்பற்றிய இன்னொரு வரலாறும் உண்டு. ஒரு நாள் கோதாவரி நதித் தீரத்தில் சாந்திபத முனிவர் தவம் இயற்றிக் கொண்டிருக்கின்றார். அப்பொழுது அவரை

13. இராவணன்-அழுபவன். 14. கடுகிய தேர் செல்லாது” என்ற தச புராணப்

பாடல்தான் இக் கதையை உணர்த்துகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/52&oldid=634403" இலிருந்து மீள்விக்கப்பட்டது