பக்கம்:நாவுக்கரசர்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 நாவுக்கரசர்

யணுகிய முனிவர் சிலர் உண்மைச் சமயம் யாது?’ என வினவ, சிவஞானத் தவ முனிவராகிய அவரும் சமண் சமயமே உண்மைச் சமயமாகும்’ என்று தம் வாதத் திற மையால் எடுத்தோதுகின்றார். சினமுற்ற அம்முனிவர்கள் சாபம் இட, அவர் பிறவி எடுத்துச் சமணம் புகுந்து தரும சேனர் ஆனார் என்று கூறுவர். கோவை சிவக்கவி மணி சி. கே. சுப்பிரமணிய முதலியார்,

மறப்படுமென் சிந்தை

மருள்நீக்கினான்காண் (6.30:5)

என்னும் திருவாரூர்த் திருத்தாண்டகப் பகுதியும், பந்தமறுத் தாளாக்கிப் பண்கொண் டாங்கே

பன்னிய தமிழ்மாலை பாடு வித்தென் சிங்தை மயக்கறுத்த திருவருளி னானை (6.84:4) கில்லாத கிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க - நிறைதவத்தை அடியேற்கு நிறைவித் தென்றும் செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானை (6.84:8)

என்ற செங்காட்டாங்குடித் திருத்தாண்டகப் பகுதிகளும் நாவரசரின் முற்பிறவியைச் சுட்டும் தொடர்களாகக் குறிப்பிடுவர்.

இந்தச் சிறுநூல் திருத்தொண்டர் புராணத்திலுள்ள திருநாவுக்கரச்ர் புராணம், நாவுக்கரசர் பெரும்ான் அருளி யுள்ள தேவாரப் பதிகங்கள் இவற்றைத் துணை கொண்டு ஆக்கப் பெறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/53&oldid=634404" இலிருந்து மீள்விக்கப்பட்டது