பக்கம்:நாவுக்கரசர்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நாவுக்கரசர்

கொள்ளுதல், சமூகத்திற்கும் சங்கத்திற்கும் பாடுபடுதல் ஆகியவை இப்பருவத்தினரின் குறிக்கோள்களாக அமையும். சிறந்த குறிக்கோள்கள் மனத்தில் எழும்; அவற்றைச் செயற்படுத்தவும் மனம் துடிக்கும்.

திலகவதியாரால் சிறப்புடன் வளர்க்கப்பெற்ற மருள் நீக்கியாரின் மாசற்ற உள்ளத்தில் கவலை எழுவதற்கு வாய்ப்பில்லை. பருவத்திற்கேற்ற அறிவு வளர்ச்சி பெறு கின்றது. உலகியலறிவும் நன்கு வாய்க்கப்பெறுகின்றது. இளமையும், யாக்கையும், செல்வமும் நிலையுடையன அல்ல என்ற நிலையாமை உணர்ச்சி எழுகின்றது.

கில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை”

என்ற வள்ளுவரின் வாய்மொழியின் உண்மை நன்கு மனத்தில் படிகின்றது. இவை நீங்குவதற்கு முன்னரே நிலையுடைய நல்ல அறங்களைச் செய்ய எண்ணுகின்றார்.

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்

இனிய கீர்த்தண் சுனைக ளியற்றல் அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்”

என்பர் பாரதி. இத்தகைய கருத்துகள் மருள்நீக்கியார் சிந்தையில் எழுகின்றன. வெயில் வெம்மை நீங்கச் சோலைகளை அமைக்கின்றார். உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத நல்ல நீர் நிறைந்த குளங்கள் பலவற்றைத் தோண்டுகின்றாா. வறுமையால் சென்று இரக்கும் இரவலர்கட்கு இல்லையென்னாது வேண்டுவன ஈந்து மகிழ் கின்றார். செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக் கின்றார். நாவலர்க்குப் பெரும் பொருளைப் பரிசிலாக

1. குறள் - 331. - 2. பா, க: சரசுவதி தேவியின் புகழ் . 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/55&oldid=634406" இலிருந்து மீள்விக்கப்பட்டது