பக்கம்:நாவுக்கரசர்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நாவுக்கரசர்

ராகிய தேரர்களை வாதில் வென்று அமண் சமயத் தலைமையினில் மேம்படுகின்றார்.”

நின்றுண்ணும் பழக்க முடையவர்களாகிய சமணர் குழுவிற் சார்ந்தவர் மருள்நீக்கியார். தேரர் என்ற புத்தரில் ஒருசாரார் இருந்துண்ணும் பழக்கமுடையவர்கள். முற்குறிப்பிட்ட சமணர்கள் குண்டர், அமணர் என்று இரு பிரிவினராகத் தேவாரத் திருப்பதிகங்களில் குறிப்பிடப் பெறுகின்றனர். இந்த இரு பிரிவினருள் குண்டர் என்பார் குழுவிலேயே சார்ந்தொழுகினவர் நம் மருள்நீக்கியார். இதனை,

குண்டனாய்த் தலைபறித்துக் குவிமுலையார்

நகைநாணா துழிதர்வேனை (4.5:4)

எனவும்,

அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிங்தை

யாரம்பக் குண்டரோ டயர்த்து நாளும் மறந்தும்அரன் திருவடிகள் கினைய மாட்டா

மதியிலியேன் (6.91:8)

எனவும்,

பெருகுவித்தென் பாவத்தைப் பண்டெலாம் குண்டர்கள்தம் சொல்லே கேட்டு உருகுவித்து (4.5:3)

எனவும் வரும் இவர் தம் வாய்மொழிகளால் இனிது உணர லாம். இவை மருள் நீக்கியார் சமண் சமயத்தை விட்டு நீங்கித் திருநாவுக்கரசராய்த் திகழ்ந்தபோது பாடப் பெற்ற திருப் பாடல்களாகும்.

மற்றும், மருள்நீக்கியார் தாம் குண்டர் குழுவிற் சேர்ந்திருந்த காலத்தில் சமண் சமயத் துறவிகளாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/57&oldid=634408" இலிருந்து மீள்விக்கப்பட்டது