பக்கம்:நாவுக்கரசர்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சமணர்களின் சூழ்ச்சி

SMMMAMAMM MMMAMMMAMMMAMMMAMMMAMMMMMAMAMAMMMMAAASAAAA

திருநாவுக்கரசர் சிவ நெறியைக் கடைபிடித்து வாழ்ந்து வருவதைப் பாடலிபுரத்திலுள்ள சமணர்கள் கேள்வியுற்று மனம் பொறாத நிலையினை அடைகின்றனர். :சமண் சமயத்திற்குப் புறம்பான பல சமயங்களையும் வாதில் வென்று நம் சமயத்தை நிலைநிறுத்திய தரும சேனர், தம்மைப் பற்றிய சூலைநோய் ஒருவராலும் போக்க முடியாமையால் உய்யும் நெறியை நாடித் திருவதிகைக்குச் சென்று முன்போலச் சைவராகிச் சூலைநோய் நீங்கி உய்ந் தனர். இனி நம் சமயம் அழிந்தது’ என வருத்தமடைந்து ஓரிடத்தில் ஒருங்கு கூடுகின்றனர். இவ்வாறு ஒன்று சேர்ந் தவர்கள், சூலை நோயை நம்மால் போக்க முடியாமை யால் தருமசேனர் மீண்டும் சிவநெறியைத் தழுவினார் என்ற செய்தியை நம் வேந்தன் அறிவானாயின், நம்மை வெகுண்டு தானும் சைவனாகி நமக்கு நாடோறும் நல்கி வரும் உணவு முதலிய வசதிகளையும் நிறுத்திவிடுவான். இனி இதற்கு நாம் யாது செய்வது?’ என்று கூறித் தமக் குள்ளே ஆராய்ந்து வஞ்சனைச் செயல்களை மேற் கொள்ளத் துணிகின்றனர். நம் சமயத் தலைவராகத் திகழ்ந்த தருமசேனர் தம் தமக்கையாராகிய திலகவதி யாரைப்போல் தாமும் சைவ நெறியைக் கடைப்பிடிக்க எண்ணித் தமக்குச் சூலை நோய் வந்ததாகப் பொய் புகன்று அந் நோய் நம்மால் தீர்க்க முடியவில்லை என்று நம்மீது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/69&oldid=634421" இலிருந்து மீள்விக்கப்பட்டது