பக்கம்:நாவுக்கரசர்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணர்களின் சூழ்ச்சி 29

என்றும் கூறுகின்றார். சமண் சமயத் தொடர்பினின்றும் நீங்கிச் சிவனருளில் திளைத்து நிற்கும் நாவுக்கரசர் உலகியல் தொடர்பினை அறவே மறந்த நிலையில் அமைச்சர்களை நோக்கி,

நின்றுண்பார் எம்மை கினையச் சொன்ன வாசக மெல்லாம் மறந்தோ மன்றே

வந்தார் மன்னவ னாவான்றான் ஆரே(8)

என வினவுகின்றார். இன்னும்,

உம்மோடு மற்றும் உளராய் நின்ற

படையுடையான் பணிகேட்கும் பணியோம் அல்லோம்,

பாசமற வீசும் படியோ நாமே (9) எனவும்,

தேவாதி தேவன் சிவனென் சிந்தை

சேர்ந்திருந்தான் தென்றிசைக்கோன் தானே வந்து

கோவாடிக் குற்றேவல் செய்கென்றாலும்

குணமாகக் கொள்ளோம்.எண் குணத்து ளோமே(10)

எனவும் தமது நிலையைப் புலப்படுத்துகின்றார். இத்திருப் பதிகத்திலுள்ள இக்குறிப்புகளை ஆழ்ந்து நோக்கினால் மறுமாற்றத்திருத்தாண்டகமாகிய இப்பதிகம் அரசனது ஏவலினால் தம்மை அழைத்துப் போகப் படைவீரர்களுடன் வந்த அமைச்சர்களை நோக்கிப் பாடப்பெற்றது என்பது தெள்ளிதிற் புலனாகும்.

நாவுக்கரசரின் வீர மொழிகளைக் கேட்ட அமைச்சர்கள் அவருன்டய திருவடிகளை வணங்கி நின்று பெருந் தகையிர், அரசதண்டத்தினின்றும் யாங்கள் உய்யுமாறு தாங்கள் எம்முடன் எழுந்தருள வேண்டும்’ என வேண்டிக் கொள்ள, நாவுக்கரசரும் அவர்தம் வேண்டுகோட்கிணங்கி, :ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன்’ என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/72&oldid=634425" இலிருந்து மீள்விக்கப்பட்டது