பக்கம்:நாவுக்கரசர்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நாவுக்கரசர்

கின்றனர். தொண்டர்களுடன் திருப்பாதிரிப்புலியூர்த் திருக் கோயிலில் சென்று வணங்குகின்றார். ஈன்றாளுமாய் எனக் கெந்தையுமாகி’ (4. 94) என்ற முதற்குறிப்புடைய செந் தமிழ் மாலையை இறைவனுக்குச் சாத்துகின்றார். புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா

உன்னடி என்மனத்தே வழுவா திருக்க வரந்தர

வேண்டும் இவ் வையகத்தே தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்

பாதிரிப் புலியூர்ச்

8. பாதிரிப்புலியூர் (திருப்பாப்புலியூர்); திருப்பாபுலி யூர் என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து :கல் தொலைவு. கடற்கரைத் தலம். கெடிலநதியின் தென்கரையிலுள்ளது. புலிக்கால் முனிவர் பாதிரி மரத்தின் கீழிருந்த சிவலிங்கத் தைப் பூசித்தமையால் பாதிரிப் புலியூர் என்பது தலப் பெயர். பழங்காலத்தில் இதன்பெயர் பாடலிபுரம் என்பது. நாவுக்கரசர் தருமசேனராக வளர்ந்த பெருமை இந்நகருக்கு உண்டு. மங்கணர் என்ற முனிவர் சாபத்தாற் ப்ெற்ற் முடக்கால் முயல் உருவில் பூசித்து அவ்வுரு நீங்கப்பெற்ற வரலாற்றைப் பாசுரம் (சம்பந்தர் 2.121:1) கூறும். கல்லிற் பூட்டிக் கடலிற் பாய்ச்சப்பெற்ற அப்பர் சுவாமிகள் அக்கல்லையே தெப்பமாகக் கொண்டு ஐந்தெழுத்தோதிக் கரையேறிய பகுதி கரையேறவிட்ட குப்பம் என வழங்கப் படுகின்றது. இது வண்டிப் பாளையம்’ என்ற பெயரால் வழங்கிவருகின்றது. சித்திரை அனுடநாளன்று கரையேற விட்ட குப்பத்தில் கரையேறவிட்டவிழா நடைபெறுகின் றது. இந்தக் குப்பம் _கடலூர் புதுநகரிலிருந்து 1;கல் தொலைவிலுள்ளது. இங்கு திருநாவுக்கரசரின் நினைவ்ாக ஒரு குளமும் படித்துறையும் மண்டபமும் இப்போது புதியனவாக அமைக்கப்பட்டுள்ளன. - -

தொண்டை மண்டலத்தின் கீழ்க்கரைப்பட்டினம் திருப்பாதிரிப்புலியூர். பாடலிபுரம் என்ற பெயரில் தமிழ் நாட்டுச் சமணரின் குருபீட இடமாக நிலவியது. சமணப் பெரும்பள்ளிகள், கல்வி நிலையங்கள், மடங்கள் அக் காலத்தில் இப்பட்டினத்தில் நிரம்பியிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/81&oldid=634437" இலிருந்து மீள்விக்கப்பட்டது