பக்கம்:நாவுக்கரசர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. நாவுக்கரசர்

ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே என்று பதி. னொரு முறை இரங்கிப் புலம்புவதனால் இஃது ஏழைத் திருத் தாண்டகம்’ என்று வழங்கி வருகின்றது. நாவுக்கரசர் தம் வாழ்நாளின் முற்பகுதியில் சமண சமயத்தைச் சார்ந் தொழுகினார் என்பதற்கும், பின்னர்ச் சிவனருளால் சைவ நெறியை மேற்கொண்டொழுகினார் என்பதற்கும் இத் திருப்பதிகம் அகச் சான்றாக அமைகின்றது.

அரசனது மனமாற்றம்: சமணர்களின் சொற்கேட்டு நாவுக்கரசரைப் பலவாறு துன்புறுத்திய பல்லவ மன்னன் சிந்திக்கத் தொடங்குகின்றான். தான் இழைத்த துன்பங் களையெல்லாம் இறையருளால் வென்றேறிய நாவுக்கரரின் பெருமை அவனை ஈர்க்கின்றது. தன் பழவினைசுளாகிய பாசம் நீங்கப்பெற்றமையால் அல்லல் நீங்கித் திருவதி கையை அடைந்து நாவுக்கரசரின் திருவடிகளை வணங்கிப் போற்றுகின்றான்; தானும் சிவநெறியை மேற்கொள்ளு கின்றான்.12 மெய்யுணர்வு கைவரப்பெற்ற காடவனாகிய அம்மன்னன் சமணர் அறிவுறுத்திய நெறி பொய் என்பதை உணர்கின்றான். பாடலிபுரத்திலுள்ள பள்ளிகளையும் பாழிகளையும் இடித்துத் தள்ளி அவற்றிலுள்ள கற்களைக் கொணர்ந்து திருவதிகையில் சிவபெருமானுக்கு ‘குணதர வீச்சரம்’ என்னும் திருக்கோயிலை எழுப்புகின்றான்.ா8 இப் பல்லவ மன்னனே காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்ட (கி.பி. 600.625) மகேந்திரவர்மப் பல்லவன் என்பது வரலாற்று ஆய்வாளரின் துணியாகும்.

12. பெ.பு: திருநாவுக்.145 13. பெ.பு: திருநாவுக்-148

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/85&oldid=634441" இலிருந்து மீள்விக்கப்பட்டது