பக்கம்:நாவுக்கரசர்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நாவுக்கரசர்

வீரட்டன் என்பது இப்பாடலின் கருத்தாகும்; சிவபெரு மானின் திருவடையாளங்களை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி இவ்வடையாளங்கள் உடையார் ஒருவராகில் அவர் திருவதிகை வீரட்டானேசுவரரே என்று கூறுவது இப்பதிகப் பாடல்தோறும் கருதாக இருத்தலால் இஃது அடையாளத் திருத்தாண்டகம் என்னும் பெயர் பெறுகின்றது.

“எல்லாம் சிவன்” (6. 5) என்ற முதல் திருக்குறிப் புடைய திருத்தாண்டகச் செந்தமிழ் மாலையில்,

முக்கணா போற்றி முதல்வா போற்றி

முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி தக்கணா போற்றி தருமா போற்றி

தத்துவனே போற்றி என்தாதாய் போற்றி தொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்பத்

துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி எக்கண்ணும் கண்ணிலேன் எந்தாய் போற்றி எரிகெடில வீரட்டத் தீசா போற்றி. (10)

என்பது பத்தாவது வாடாத தமிழ்மணங் கமழும் நறுமலர். இப்பக்திப் பாடல்கள் அனைத்தும போற்றி போற்றி” என்று பன் முறையாக அருளச் செய்யப்பெற்றிருத்தலால் இது போற்றித்திருத்தாண்டகம் என்ற பெயர் பெறுகின்றது.

அரவணையான் (6, 6) என்ற முதற்குறிப்பையுடைய திருத்தாண்டகப்பதிகத்தில்,

அணியனவும் சேயனவும் அல்லாவடி

அடியார்கட் காரமு மாயவடி பணிபவர்க்குப் பாங்காக வல்லடி பற்றற்றார் பற்றும் பவளவடி மணியடி பொன்னடி மாண்பாமடி

மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவடி தனிபாடு தண்கெடில நாடன்னடி

தகைசார் விரட்டத் தலைவன்னடி, (9)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/95&oldid=634452" இலிருந்து மீள்விக்கப்பட்டது