பக்கம்:நாவுக்கரசர்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நாவுக்கரசர்

பஞ்ச பூத வலையிற் படுவதற் கஞ்சி நானும் ஆமாத்துார் அழகனை நெஞ்சி னால் நினைத் தேன்கினை வெய்தலும் வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே. (4) என்பது நான்காவது பாடலாகும்.

“வண்ணங்கள் தாம்பாடி’ (6.9) என்று தொடங்கும் திருத்தாண்டகத்தில்,

ஒன்றாலும் குறைவில்லை ஊர்தி வெள்ளேறு. ஒற்றியூர் உம்மூரே, உணரக் கூறீர்? நின்றுதான் என்செய்வீர் போவி ராகில்

நெற்றிமேற் கண்காட்டி கிறையுங் கொண்டீர் என்றுந்தான் இவ்வகையே இடர்செய் கின்றீர் இருக்குமூர் இனியறிங் தோமே கம்பமோ? அன்றித்தான் போகின்றீர் அடிக ளெம்மோ

டழகியரே ஆமாத்துர் ஐய னாரே (8) என்பது எட்டாவது பாடல். இந்த இரண்டு பதிகப் பாடல் களும் படித்து அநுபவிக்க வேண்டியவை.

அடுத்து திருக்கோவலூர் வருகின்றார். சனவரியில் வந்தால் ஆற்றில் சிறிது நீர் போகும், நடந்தே கடக்கலாம். “செத்தையேன்” (4.69) என்ற முதற் குறிப்பினையுடைய திருப்பதிகம்பாடி கோவல் வீரட்டனாரை வழிபடுகின்றார்.

4. கோவலூர் வீரட்டம் (கீழுர்) விழுப்புரம்-காட்பாடி இருப்பூர்திப் பாதையில் திருக்கோவலூர் நிலையத்தி, விருந்து கல் தொலைவிலுள்ளது. பெண்ணையாற்றின் தென்கரையிலுள்ளது. அந்தகாசுரனைச் சங்க ரி த் த வீரட்டம், மெய்ப் பொருள் நாயனார் அரசு புரிந்து முக்தி அடைந்த தலம். நிலைய்த்திலிருந்து பேருந்து வசதியுண்டு. திருக்கோவலூர் பாதிநாள் இரவில், மூவரும் நெருக்கி (பொய்கையார், பூதத்தார், பேயார்)_மொழி விளக்கேற்றி முகுந்தனைத் தொழுத இடம். இவ்வூரைத் தலைநக ராகக் கொண்டு மலையமான் திருமுடிக்காரி ஆண்டு வந்தான், *  ; -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/99&oldid=634456" இலிருந்து மீள்விக்கப்பட்டது