பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————————————முதல் தொகுதி / சந்திப்பு * 109

“என்னப்பா! அங்கேயே பார்க்கிறே? படகைத் தள்ளு!” நினைவு திரும்பியது. நகராமல் தத்தளித்துக் கொண்டிருந்த படகை துடுப்புகளால் தள்ளினேன். பாலு இன்னும் அந்தப் படகில் உட்கார்ந்திருந்த சிறுமியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"அப்பா அந்தப் பொண்ணு அந்த மாமிக்கு மகளா, அப்பா?”

"சீ போடா... அந்த மாமியின் தங்கையாக இருக்கும்” என்றேன். சிறுமி அவளுக்கு நேர்மாறாக அலங்காரத்தின் சிகரமாகக் காட்சி அளித்தாள் தோற்றத்தில். பட்டுப் பாவாடை, வைர நெக்லஸ், இரட்டைப் பின்னல், தலை தாங்காமல் மல்லிகைப்பூ முதலிய ஆடம்பர அலங்காரங்களால் நிறைந்திருந்தாள் அவள். எங்கள் படகுகள் வேறு வேறு திசையில் பிரிந்தன. படகு சிறிது தூரம் சென்றதும் கீழ்க்கண்ட சம்பாஷணை அரைகுறையாக என் காதில் விழுந்தது.

“. அந்த மாமாவுக்குப் பிள்ளையா அவன்?” என்று கேட்டாள் சிறுமி.

"சீ போடி உளறாதே!” சிறு குழந்தைகளுக்கு ஒரே மாதிரி சந்தேகங்களே எப்போதும் ஏற்படுகின்றன. நான் அதைக் கேட்டு எனக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டேன்.

ஏரியில் சுற்றிவிட்டுப் படகைக் கரைக்குக் கொண்டு வரும்போது மணி ஐந்தரை. அவளும் அந்தச் சிறுமியும் எங்களுக்கு முன்பே கரையேறிச் சென்றுவிட்டனர். பாலு தூக்கக் கிறக்க முற்றுத் தள்ளாடினான். பனியும் குளிரும் அதிகமாகிவிட்டிருந்தன. அவனை இழுத்துக்கொண்டு தங்கியிருந்த ஹோட்டலை அடையும்போது மணி ஆறேகாலுக்கு மேல் ஆகிவிட்டது. கொடைக்கானலில் அந்த நேரத்தில் குளிருக்கு அடக்கமாகத்துங்குவதைத் தவிர வேறு எந்த நல்ல காரியத்தைச் செய்வதற்கு முடியும்? அதையே நானும் பாலுவும் செய்தோம்.

2. அனுமானம்

காட்சிக்கு வரம்பு உண்டு. கட்டுப்பாடு உண்டு. அனுமானத்துக்கு இவை இரண்டுமே இல்லை. தூக்கமோ, மயக்கமோ இன்றி மனத்தில் தன் நினைவோடு ஏற்படக்கூடிய சொப்பனாவஸ்தைக்குத்தான் அனுமானம் என்ற பெயரோ?

பாலு சிறு குழந்தை. சாப்பிட்டதும் தூங்கிவிட்டான். தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன் நான்.

அவள், அவளுடைய அழகு, அவள் படகைச் செலுத்திய கம்பீரமான கவர்ச்சி, "சீ போடி, உளறாதே!” என்று தங்கையைக் கடிந்து கொண்ட இனிய குரல் எல்லாம் நினைவில் மிதந்தன.நான்தங்கியிருந்த அதே லேக் வியூ ஹோட்டலில்தான் அவளும் தங்கியிருந்தாள்.அன்று ஏரியிலிருந்து ஹோட்டலுக்குத் திரும்பியவுடனே இதை நான் தெரிந்து கொண்டுவிட்டேன்.

அந்தப்பெண்ணும் அந்தச் சிறுமியும் தவிர வேறு யாரும் உடன் வந்திருப்பதாகத் தெரியவில்லை. ஒரு இளவயகப் பெண் இப்படி ஒரு சிறுமியோடு தனியாகக்