பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



என் மனைவி என்னைச் சமாதானப்படுத்தும் தோரணையில் பேசத் தொடங்கிவிட்டாள்.

'நாம் இவளுடைய தம்பியைப் பற்றி உண்மையான அனுதாபத்தோடு சொல்கிறோம். இவளோ அதை வேறுவிதமாக எடுத்துக் கொள்கிறாள். இனி நாம் இதைப்பற்றி இவளிடம் பேசாமல் இருப்பதே நல்லது’ என்று அடக்கிக் கொண்டேன்.

அன்று மாலை அக்காவுக்கும் தம்பிக்குமே ஒரு தகராறு ஏற்பட்டுவிட்டது.ராஜம் பூஜையறைக்குள் அந்திவிளக்கு ஏற்றித்தீப வழிபாடுசெய்து கொண்டிருந்தாள். அவள் தம்பி குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டுக் கொண்டே பூட்ஸ் கால்களோடு உள்ளே நுழைந்துவிட்டான்.

“என்னடா அம்பி? இப்படிச் செய்யலாமா நீ? குடிப்பதற்குத் தண்ணீர் அங்கேயிருந்தே கேட்டால் நான் கொடுக்கமாட்டேனா?”

"ஏன்? என்ன அக்கா? இப்போ நான் என்ன செய்துவிட்டேன்?” அவன் ஒன்றும் தெரியாத மாதிரி கேட்டான்.

"உனக்கு நம்பிக்கையில்லேன்னா மற்றவர்களைக் கஷ்டப்படுத்தலாமா? பூட்ஸ் காலோடு பூஜையறையில் இங்கே வந்து நிற்கிறாய்”

"இதிலே என்ன தப்பு, அக்கா?”

"போடா போ! எதையெடுத்தாலும் உனக்கு விதண்டாவாதம்தான்!”

“தரையைத்தானே மிதிக்கிறேன்! சாமியையா?”

“போதும் போ! உன் பேச்சும் நீயும் தண்ணீரைக் குடித்துவிட்டுப் போய்ச் சேர்.” கோபத்தோடு அலுத்துக் கொணடாள்.

கடைசிவரை நான் பேசாமல் இருந்துவிட்டேன். ‘இது அக்கா தம்பி சண்டை - நான் போனால் இருவருமே என்னை எதிர்த்துக் கொண்டால் என்ன செய்வது?’ எனக்கு ஒன்றும் தெரியாததுபோல் இருந்துவிட்டேன். தம்பி இப்படிச் செய்துவிட்டான் என்று அவளாக என்னிடம் பிரஸ்தாபிக்கவும் இல்லை. என்ன இருந்தாலும் சொந்தத் தம்பியைக் காட்டிக் கொடுக்க மனசு வருமா?

மறுநாள் வெள்ளிக்கிழமை என்ன தலை போகிற காரியமாக இருந்த போதிலும் வெள்ளிக்கிழமை மாலை மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போகும் வழக்கத்தை நிறுத்தியதில்லை நாங்கள். மீனாட்சியைத் தரிசித்துவிட்டுப் பொற்றாமரைக் குளக்கரையில் சிறிது நேரம் உட்கார்ந்து வருவதில் புனிதமான நிம்மதி ஒன்று கிடைத்தது. தார் ரோட்டில் நடக்கும் போதோ, வீட்டிலிருக்கும்போதோ, நாடகம் சினிமா பார்க்கும்போதோ, கிடைக்காதநிம்மதி அதுகோவிலில் மட்டுமே கிடைத்தது.

வழக்கம்போல அன்று மாலையும் கோவிலுக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தோம். கூடத்தில் உட்கார்ந்து எங்கள் குழந்தை குஞ்சுவவுக்கு தலைவாரிப் பின்னிவிட்டு கொண்டிருந்தாள் ராஜம். ‘காமிரா உள்’ளில் மைத்துனன் முகத்துக்கு