பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்




“சிந்தித்துப் பார் விளங்கும்! உன்னுடைய பகுத்தறிவு எப்படி எல்லாம் நினைக்கிறதோ, அப்படியெல்லாம் உன் முன் தோன்றவும் செயலாற்றவும் தெய்வத்தால் முடியாது! உன் அறிவைக் கொண்டு நீதான் அதைப் பாவிக்க வேண்டும்!”

"அப்படியானால் உண்மையைவிடப் பாவனை உயர்ந்ததா?” என்றான்.

“அல்ல! உண்மை அணுகுவதற்கரியது, உயிருள்ள நிஜ யானையைப் போல. பாவனை பக்திக்குரியது, யானைப் பொம்மையைப் போல” என்றேன்.

மைத்துனன் தலையைச் சொரிந்தான். "அப்பா! ஊழி ஊழியாக வரும் பாரதநாட்டுத் தெய்வப் பண்பாடு மகத்தானது. கோயிலும் குளமும் கட்டியவர்கள் அந்தப் பண்புக்கு வடிவு கொடுத்திருக்கிறார்கள்.”

நான் சொன்னது அவனுக்கு விளங்கவில்லை!

(கல்கி, 7.7.1957)