பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————————————முதல் தொகுதி / கற்பனையேயானாலும்... ★ 161

புரியவில்லை. காரணம் இல்லாமல் ஒருவிதமான பயம் மட்டும் ஏற்பட்டது. அதற்குள் இன்ஸ்பெக்டர் எங்களருகில் வந்து நேரடியாகவே பேச ஆரம்பித்துவிட்டார்.

“நீங்கள்தானே எழுத்தாளர் என்.பி.சாரதி”

“ஆமாம், நான்தான். என்ன வேண்டும்?” - குரல் உளறிவிடாமல் சமாளித்துக் கொண்டு பதில் சொன்னேன்.

“இதோ, இந்தத் தோல் பையைப் பாருங்கள்; இதில் உங்கள் விஸிட்டிங் கார்டு, புகைப்படம், அந்த ஓட்டலில் தங்கியதற்கு உரிய ரசீது, எல்லாம் இருக்கின்றன. கொஞ்சம் பணமும் இருக்கிறது. இது உங்களுடையதுதானே?”

“ஆமாம்!”

“எங்கே போட்டுவிட்டு வந்தீர்கள்?”

அது என் பை அல்ல என்று நான் மறுத்திருக்கலாம். ஆனால் அப்படி நான் மறுத்துவிட வழியில்லாமல் பையில் உள்ள ஆதாரங்களை முழுமையாக ஒப்பித்து என்னை ஒப்புக்கொள்ளச் செய்துவிட்டார், இன்ஸ்பெக்டர். ‘இனி ஏமாற்ற முடியாது; உண்மையை நடந்தது நடந்தபடியே சொல்லிவிட வேண்டியதுதான்’ என்று தோன்றியது.

இன்ஸ்பெக்டரை அமரச் செய்து நானும் நண்பருமாகக் காலையில் நடந்ததைத் தெளிவாகக் கூறினோம்.

“நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் நீங்கள் தற்செயலாகப் பார்க்கப் போனவர்கள்தாம்; உங்களுக்கும் மேற்படி கொலைக்கும் சம்மந்தம் இல்லை என்பதை உங்கள் வாய்மொழியால் மட்டுமே நம்புவதற்கில்லை. வேறு ஏதாவது ஆதாரம் வேண்டும்” என்றார் இன்ஸ்பெக்டர்.

“என்ன இன்ஸ்பெக்டர் சார் ஏதோ ஊர் சுற்றிப் பார்க்க வந்தவர்களை இப்படிப் பெரிய வம்பில் மாட்டி வைக்கிறீர்களே?” என்று கெஞ்சும் குரலில் கேட்டேன்.

“எனக்கு என்ன சார்? உங்கள் மேலே தனிப்பட்ட முறையில் எனக்குக்கூட அனுதாபமாகத்தான் இருக்கிறது.இந்தத் தோல்பையை நீங்கள் அங்கே போட்டுவிட்டு வந்ததனால்தானே இவ்வளவு வம்பும்? இது அங்கே கிடக்கவில்லையானால் ‘மனம் வெறுத்துத் தற்கொலை’ என்று நாங்களே பொதுவாக எழுதிவிட்டு நடவடிக்கையே எடுக்காமல் பேசாமல் இருந்திருப்போம். இனிமேல் எங்கள் கடமையை நான் செய்ய வேண்டியதுதான்.” இன்ஸ்பெக்டர் கையை விரித்துவிட்டார்.

“சார், அந்த டிரைவரைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து சாட்சி சொல்லச் செய்கிறோமே; அப்போதாவது நம்புவீர்களா?” என்றார் நண்பர்.

“அதில் பிரயோஜனமே இல்லை. அந்த டிரைவர் என்ன சொல்வான் தெரியுமா? இவர்களைக் கோவளத்திற்குப் போகும் ரோட்டில் இறக்கிவிட்டேன். இவர்கள் இரண்டு மணி நேரம் கழித்துத் திரும்பி வருவதாகச் சொல்லிவிட்டுப் போனார்கள்
நா.பா.I-11