பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/177

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதல் தொகுதி/ நினைவில் நின்றவள் ✽ 175

விவரங்களைச் சொல்லி அனுப்பியிருந்தார். கோவிலுக்காக யானை பிடித்துக் கொள்வதற்குக் காட்டிலாகா அனுமதியும் கிடைத்துவிட்டது. குஞ்சுக்குட்டன், நாராயணன் நம்பியார், முரளீதர குரூப், நான் ஆகிய நால்வரும் வேறு சில ஆட்களும் யானையை ஒரு வாரத்துக்குள் பிடித்துக் கொடுத்து விடுவதென்ற ஏற்பாடுகளைத் தொடங்கினோம். மலையில் யானைகள் அதிகமாகப் பழகும் அடர்ந்த பகுதி ஒன்றில் எப்போதும் வழக்கம்போல் ஒரு பெரிய குழி வெட்டப்பட்டது.ஆழம், அகலம், உயரம் எல்லாம் யானை விழுவதற்கேற்பப் பொருத்தமாக அமைக்கப்பட்ட அந்தக் குழியின் மேல் மெல்லிய மூங்கில் தட்டியால் மூடினோம். மண்ணைப் பரப்பிப் பார்ப்பதற்குத் தரைபோல் தோன்றும்படி செய்தபின் கரும்புக் கழிகளும் உடைந்த தேங்காய்களும், தழைகளும் அதன்மேல் பரப்பப்பட்டன. நாங்கள் குறிப்பிட்டிருந்த ஒரு வார அவகாசத்தில் இந்தப் பூர்வாங்க வேலைகள் முடிவதற்கே இரண்டு நாட்கள் கழிந்துவிட்டன.பொய்க் குழியின் வடக்கே மேட்டில் உயர்ந்த மரக்கிளைகளின் நடுவே ஒரு பரண் கட்டியிருந்தோம். எஞ்சியிருக்கும் ஐந்து நாட்கள் தாம் பயங்கரமும், கடுமையும் கவனமும் நிறைந்தவை.நாங்கள் நான்கு பேரும் ஒருவர் மாற்றி ஒருவர் இரவு பகல் பாராமல் பரணில் இருந்தாக வேண்டும். கரணம் தப்பினால், மரணம் என்கிற மாதிரி நிலை அது. பகலில் இரண்டு பேர்கள், இரவில் இரண்டு பேர்கள் என்று முறை வைத்துக் கொண்டு நாட்களைக் கழித்தோம். பேரூர்ச் சிவபெருமானுக்கு யானையைச் சீக்கிரமாகத் தருவித்துக் கொள்ள வேண்டுமென்று திருவுள்ளமில்லையோ, அல்லது நாங்கள் பறித்து வைத்திருந்த பொய்க்குழி வழியே யானைகள் வரவில்லை என்பதனாலோ, நான்கு நாட்கள் வரை எதிர்பார்த்தபடி எதுவும் நிகழவில்லை. கரும்புக்குழிகளும் குழிமேல் பரப்பியிருந்த பிற தழைகளும் வாடிக் கொண்டு வந்தன. ஐந்தாம் நாள் பகலிலும் யானை வரவில்லை. 'நாங்கள் திட்டமிட்டிருந்தபடி ஏழு நாட்களில் காரியத்தை முடிக்க இயலாமல் போய்விடுமோ? என்று திகைத்தோம். எதற்கும் அன்று ஐந்தாம் நாள் இரவையும் பார்த்துவிடுவதென்று முடிவாயிற்று. அன்றிரவு பரணிலிருந்து குழியைக் கண்காணிக்கும் பொறுப்பை நானும் முரளிதர குரூப்பும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஏழு மணிக்கே இராச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு கம்பளி, டார்ச்லைட் தண்ணீர்க்கூஜா சகிதம்பரணுக்குச் சென்று எங்கள் முறையை ஒப்புக் கொண்டோம் ஏற்கனவே காலையிலிருந்து அங்கே காத்துக் கொண்டிருந்த குஞ்சுக்குட்டனும் நாராயணன் நம்பியாரும் எங்களைக் கண்டதும் பொறுப்பை ஒப்புவித்துவிட்டு வீடு திரும்பிச் சென்றனர். முரளிதர குரூப்புக்குச் சமீபத்தில்தான் திருமணமாகியிருந்தது. இளம் மனைவியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு என்னோடு விடிய விடியப் பரணில் இருக்கப் பைத்தியமா என்ன? எட்டரை மணிச் சுமாருக்கு, “சாரோ! நீங்கள் இவ்விடே இருக்கட்டே. ஞான் வீட்டுக்குப் போய் வருன்னு” என்று சொல்லிக் கம்பளியைப் போர்த்திக் கொண்டு கிளம்பிவிட்டான் அவன். நான் பரணில் ஏறிப் படுத்துக் கொள்ளச் சென்றேன்.

தீடீரென்று அந்த ஒசையும் அலறலும் கேட்டன. குழி மேல் மூடியிருந்த மூங்கில் தட்டி முறியும் ஒசைǃ யானைதான் விழுந்துவிட்டதோ என்று நான் பரபரப்பாக எழுந்திருந்தேன்.ஆனால் தட்டி முறிந்ததை அடுத்து ஒரு பெண்ணின் பரிதாபகரமான