பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

பாட்டியாவதற்கு இருந்த அவள் கோலம் என் நெஞ்சைக் குத்தியது. இத்தனை வருடங்களாக என் புகழ்க் கொடி எந்தக் கம்பத்தை ஆதாரமாகக் கொண்டு யாருடைய துண்டுதலால் பறப்பதாக நான் கனவு கண்டு கொண்டிருந்தேனோ அந்தக் கம்பம் கொடிமரமாக இல்லை; வெறும் வழுக்குமரமாகிவிட்டது. தாபத்தோடு நான் மறுபடியும் கிழடுதட்டின அவள் முகத்தைப் பார்த்தேன்.

அந்த மூதாட்டி என்னைப் பார்த்துச் சிரிக்கவில்லை! என்னை யாரென்று அவளால் இனங்கண்டு கொள்ளவும் முடியவில்லை. ரயிலில் இப்படி மூன்றாவது மனிதன் அநாகரிகமாகப் பார்க்கிறானே என்று எண்ணி, முகத்தைச் சுளித்தாள்!


(கல்கி, தீபாவளி மலர், 1958)