பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / அருமை அம்மாவுக்கு * 251

“ஏன்? பழைய அம்மாவரமாட்டாளா பாட்டி... 'அப்படின்னு நான் பாட்டியைக் கேட்டேன். அதுக்கு அவ பதில் சொல்லாமல் அழுதாள்.

"நீயே சொல்லும்மா! எனக்குப் புது அம்மா எதுக்கு? நீதான் இன்னுங் கொஞ்ச நாளிலே புதுப் பாப்பாவோடே வீட்டுக்கு வந்திடுவியே. நீ வீட்டுக்கு வந்ததும், முதல் வேலையாப்பாட்டியை அவ ஊருக்குத் தொரத்திப்பிடணும். நீ சுருக்க வெரசா வந்திடு அம்மா.

கமலி

என் கண்களில் ஈரம் கசிந்து விட்டது. ஆயிரமாயிரம் கடிதங்களை விலாசம் பார்த்து ஊர் பிரித்து அனுப்பிப் பழகியவை என் கைகள்.ஆனால், கமலியின் கடிதத்தை எங்கே அனுப்புவது? எந்த ஊர் முத்திரை குத்தி அனுப்புவதென்று எனக்கு விளங்கவே இல்லை. கைக் குட்டையால் ஈரம் கசிந்த என் கண்களைத் துடைத்துக் கொண்டேன்.

(கல்கி, 25.1.1959)