பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்




நினைக்கணும்னா இப்படி யாராவது ஒருத்தரைத் தூக்கிவிடணும்னு இந்த விழா, கிழா எல்லாம் தடபுடல் பண்றாரு” டிரைவர் பேசிக்கொண்டே போனான்.

“உம் பேரரென்ன டிரைவர்”

"ஏங்க? முனிரத்னம், பாங்க”

அந்தப் புத்தகத்தை வாங்கி, “உண்மை ரசிகன் முனிரத்தினத்துக்கு அன்பளிப்பு” என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு, "இந்தா, இதை நீ வச்சுக்க, எனக்கு விழாவுக்கு வர ஒழியாதுன்னு உங்க முதலாளி கிட்டப் போய்ச் சொல்லிடு எப்பவாவது நீ வந்தா இன்னும் படிக்க நிறையப் புத்தகம் தரேன்.போயிட்டுவா” என்று சொல்லிவிட்டு உள்ளே போய்க் கதவைப் படீரென்று அடைத்துத் தாழிட்டுக் கொண்டான் ஏகாம்பரம், காற்றில் மிதந்து செல்லும் மோகினிப் போல் அழகாக அசைந்து திரும்பிச் சென்றது ‘பிளிமத்’ கார்.

(தாமரை, ஜூலை, 1959)