பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35. வாழ்க்கையின் கடிதம்

ருயிரே,

அன்றொரு நாள் அந்தி நேரத்திலே ‘அத்தான்! என் பிரிவைத் தாங்குமோ உனது இதயம்?’ என்று வாய்மொழியிலே கேட்டு விடைதந்த என் இன்னமுதே! இன்று எனது இதயத்தைக் கசக்கிப் பிழிகிறதடி நமது பிரிவும், நமக்கிடையேயுள்ள ஒரு நூறு கல் தொலைவும். கடந்த காலத்தைச் சுற்றியலைந்து அந்த நினைப்பிலே ஆறுதலடைகிறதடி எனது நெட்டுயினைத்த நெஞ்சம்!

சிறு வயதிலிருந்தே சேர்ந்து வளர்ந்தோம். எனக்காக நீ, உனக்காக நான் என்ற எண்ணம். அந்த எண்ணத்திலே பிறந்த ஏக்கம் உனக்குத் தெரிந்தது தானே என் இன்பமே! யாரோ உன் தாய் மாமனாம் தறுதலை - பிழைப்பைத் தேடி சிங்களம் சென்றவன் பின்னர் ஏன் இங்கு திரும்ப வேண்டும்? திரும்பியவன் உன்னை ஏன் விரும்ப வேண்டும்? விரும்பியவன் நேரே உன் தாயை நெருங்கி நான் உன் மகளை மணக்க வேண்டும். மறுக்காது மகிழ்வுடன் இசைவு தா என்றல்லவா கேட்டிருக்க வேண்டும் அந்த எத்தன்? அதை விடுத்து, அழகுச் சோலையில் நீ ஆடி மகிழ்ந்திருந்த வேளையிலே உன் கண் பொத்தி, விளையாட அந்தக் கயவன் துணிந்ததும், நீ கதறக் கதற உன் கரம் பற்றி இழுத்ததும் என்னை காப்போர் இங்கு யாருமில்லையா? என்று நீ கூவியதும், ஏதோ சிந்தனையால் அடைக்கப்பட்டு நான் அச்சோலை வழியே வந்ததும், என்னால் அவன் இடர்ப்பட்டு ஓடியதையும் நினைத்தால், என் இன்பமே திரைப்படம் போல் தோன்றுகிறது.

கண்ணோடு கண் நோக்கப் பின் நீ நிலம் நோக்க வானத்துச் செம்மை உன் வட்ட முகத்துக்கேறியது எவ்வாறு? மேகத்துக் கருமை உன் கூந்தலுக்கும், முல்லையின் வெண்மை உன் முத்துப் பற்களுக்கும் தோற்று ஓடியது ஏன்? எனக்குப் பயந்து பள்ளிப் பருவத்தில் துள்ளித் துள்ளி நீ ஓடியதும், உனைத் துரத்தி நான் ஓடியதையும் நினைத்தால் என் அஞ்சுகமே! வாழ்க்கை முழுவதும் பிள்ளைப் பருவத்திலேயே கழியக் கூடாதா என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது! பிள்ளைப் பருவத்திலே நமது விளையாட்டும், பின்னர் கல்லூரியிலே நாம் பயிலும் போது கண் பார்வையாலேயே என்னைக் கொல்லாமல் கொன்ற விந்தையையும் நினைக்க நினைக்க நான் வானத்தில் பறந்து வட்டமிடுவதைப் போன்ற உணர்ச்சியடைகிறேன்.

உனக்கு நினைவிருக்கிறதா என் இன்பமே, நாம் கல்லூரியிலே பயின்ற போது பாலாற்றிலே பெரு வெள்ளம் வந்தது? அந்நாளைய நிகழ்ச்சிகளை நம்மால் நம் வாழ் நாள் அளவும் மறக்க இயலாதே கரையோரம் சென்ற நீ கால் வழுக்கி நீரில் மூழ்கியதும், சுற்றிச் சுழன்றோடும் அப்புதுப் புனலில் நீந்தத் தெரியாத நான் பாய்ந்து உன்னைக்