பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி நெருப்புக் கோழி * 303

என்பதே எனக்கும் ஆசை.ஆனால் தினகரியின் கள்ளமற்ற முகத்தைப் பார்க்கும்போது என் நெஞ்சு இளகி விடுகிறது. நாக்கு உண்மையைச் சொல்லிவிடத் துடிக்கிறது. எப்போதாவது வாய் தவறிச் சொன்னாலும் சொல்லிவிடுவேன். அதனால் நான் இங்கிருந்தே போய்விடுகிறேன். போகும்போது உங்களுடைய அநுமதியில்லாமல் அந்த உண்மையின் சின்னங்களான மிலிடரி உடையையும் அந்தக் கடிதத்தையும் என்னோடு கொண்டு போகிறேன். தினகரியின் குது கலம் என்றென்றைக்கும் இப்படியே பேதமை நிறைந்து வாழ இறைவனைப் பிராத்திக்கிறேன்” என்று எழுதி உறையிலிட்டு ஒட்டிக் குஞ்சுப் பணிக்கரிடம் கொடுத்து நம்பூதிரியிடம் சேர்க்கச் சொன்னேன்.

(கலைமகள், தீபாவளி மலர், 1959)