பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

வேலையன் கொதிப்பை வெளிக்காட்ட முடியாத ஏலாமையோடு உள்ளேயே கொதித்தான். ஏழையின் கொதிப்பு நீறு பூத்த நெருப்பு!

ரங்கநாராயண ஐயர் தம் நிலத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு வீட்டுக்குப் போவதற்காக அந்தப் பாதையாக வந்தார். அவர் கையில் அந்தப் பையும் இருந்தது. “வேலையா! உன் காய்கறித் தோட்டம் நல்ல பலன் வச்சிருக்குடா, மண் புழு நிறைய இருந்தாக் காய்கறிப் பயிருக்கு யோகம்டாப்பா..” என்றார் தக்காளிப் பழப்பையை முதுகுக்குப் பின்னால் மறைக்க முயன்று கொண்டே

‘சாமி மண்ணுக்கு மேலேயும் புழுக்கள் இருக்குங்க. மண்ணுக்குள்ளற இருக்கும் புழுவைத்தான் நீங்க சொல்lங்க” என்று சொல்லி அவரைப் பார்த்துச் சிரித்தான் வேலையா. அந்தச் சிரிப்புக்குத்தான் எத்தனை அர்த்தங்கள்?

(தாமரை, நவம்பர், 1959)