பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி

ஆலமரம் * 317

வாங்கியிருக்கேன்.இன்னும் மாமா அப்பப்போகொடுக்கிற காசெல்லாம் சேர்த்திட்டு வரேன்.அடுத்தாப்போல ஒரு திருக்குறள் பரிமேலழகருரைப் புத்தகம் வாங்கிடனும்னு ஆசை."

தேசிகருக்கு மெய் சிலிர்த்தது. நெஞ்சில் யாரோ கூடை கூடையாக ரோஜாப் பூவைக் கொட்டின மாதிரி இருந்தது. கண்களும், முகமும், மலர்ந்தன. உள்ளேயும் ஏதோ மலர்ந்து சிலிர்த்தது.

"குழந்தை! இப்படிப் பக்கத்திலே வாடாப்பா. உன் முகத்தைப் பார்க்கிறேன். என்று நாத் தழுதழுக்க உணர்ச்சிவசப்பட்ட குரலில் கூவி அழைத்தார் தேசிகர். பையன் அருகில் வந்தான். அவன் முகத்தைப் பார்த்தார். அங்கே ஆர்வமும், துடிப்பும் ஒளிர்ந்தன."ராசா! நீ தங்கம்டா..” என்று அப்படியே அவனைத் தழுவிக் கொண்டார். வெளியே அறை வாசலில் பொன்னம்பலத்தின் குரல் கேட்டது.

“என்னடா வந்ததும் வராததுமாகத் தாத்தாவிடம் போய் அரட்டை? லீவில் கழுதை மேய்க்கலாமென்று இந்தப் பட்டிக்காட்டுக் குட்டிச் சுவரைத் தேடி வந்தாயிற்று!" உருப்படியாக ஏதாவது டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூடில் சேர்த்து லீவை அங்கேயே கழிக்க ஏற்பாடு செய் என்று இன்றைக்குக் காலையில் தான் மாமாவுக்குக் கடிதம் எழுதினேன். நீ என்னடா என்றால் சொல்லாமல், கொள்ளாமல் இங்கே வந்து குதித்திருக்கிறாய்! போ, போய் ஏதாவது இங்கிலீஷ் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு படி வீண் அரட்டையடிக்காதே.” என்று இரைந்தான் பொன்னம்பலம்.

“தாத்தா! அப்பாகூப்பாடு போடறார்.போய்விட்டு அவர் வெளியே போனப்புறம் மறுபடியும் வரேன். நீங்க இந்தப் பழத்தை எடுத்துக்குங்க..” என்று மெல்லச் சொல்லிவிட்டு வெளியே நழுவினான் பேரப்பிள்ளையாண்டான்.

அன்றைக்கு மத்தியானம் தேசிகருக்கு நிம்மதியாகத் துக்கம் வந்தது. தூக்கம் கலைந்து அவர் கண் விழித்தபோது அறைக்குள் ஏதோ ஒசை கேட்டது. கண்ணாடியைப் போட்டுக் கொண்டு நிமிர்ந்து உற்றுப் பார்த்தார்.

பேரப் பிள்ளையாண்டான் சரவணன், ஏடுகளைத் துரசிதட்டிப் பிரித்து உதறி அடுக்கிக் கொண்டிருந்தான்.

“ஏண்டா குழந்தை, இந்தக் காரியமெல்லாம் உன்னை யாருடா செய்யச் சொன்னது?”

“யாரு தாத்தா சொல்லனும்? அப்பா வெளியிலே போனப்புறம் இங்கே வந்தேன். நீங்கநல்லா அசந்து தூங்கிக்கிட்டிருந்தீங்க.இதெல்லாம் பக்கத்திலே வந்து பார்த்தேன். ஒரே தூசியும், கீசியுமாத்தாறுமாறாகக் கிடந்தது. எடுத்துச் சரிசெய்து அடுக்கலாம்னு ஆரம்பிச்சேன்.”

அந்தப் பதிலைக் கேட்டு அயர்ந்து போனார் தேசிகர். பேச நாவெழாத பேரானந்தத் திருப்தியில் சிக்குண்டு அப்படியே பேரனை வைத்த கண் வாங்காமல்