பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள் சகிப்புத்தன்மையை மட்டும் கற்றுக் கொடுக்கவில்லை. இன்னும் எவ்வளவோ பெரிய விஷயங்களைக் காலம்’ என்ற ஞான போதகர் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தார். சமயவழியிலே உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகள் காட்டாமல், பொருளாதாரத் துறையிலே பணக்காரன் ஏழை என்ற பிரிவினைகள் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்."ஒன்றே குலம்-ஒருவனே தேவன் என்ற உயரிய தத்துவம் தெரிய வந்தது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த மனப்பான்மை பழக்கத்தில் வந்தது. காலம் கற்றுக் கொடுத்த இந்த உண்மைகளை எப்பொழுதும் கடைப்பிடிப்பார்கள் என்று சொல்வதற்கும் இல்லை. பின்னர் அவர்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படும்பொழுது காலம் கற்றுக் கொடுத்த இந்த உயர்ந்த பண்பாட்டை, சிறந்த பழக்கங்களை மறந்தாலும் மறப்பார்கள். ஏன்?. மனம் அப்படிப்பட்டது. மனித மனம் ஒரு நூலறுந்த காற்றாடியைப் போன்றது. சாந்த சூழ்நிலை என்ற சூறாவளிக் காற்றுகளையெல்லாம் அது தனக்குச் சாதகமாகக் கொள்ளும். அந்தச் சூறாவளிக் காற்றுகள் தன்னை எங்கே கொண்டு போய் விடும் என்ற கவலையே அதற்குக் கிடையாது. ஒரு காலத்தில் தங்கசாமி பத்துத் தறிகளுக்குச் சொந்தக்காரன்; அவன் பதினாறு : தொழிலாளிகளுக்கு வேலை கொடுத்து வந்தான். ஊம். அதையெல்லாம் நினைத்துக் கொண்டால் இந்த வேளைப் பசி போகுமா? அதனால்தான் அவன் நடையை எட்டிப் போட்டுக் கொண்டிருந்தான், பக்கத்தில் உள்ள கிராமத்தை நோக்கி. தோளுக்கு ஒரு குழந்தையாக அவனுடைய குழந்தைகள் இரண்டும் வாகனமேறியிருந்தன. அவைகள் இரண்டும் சுற்றுப்புறக் காட்சிகளைக் கண்டு கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்தபடியே இருந்தன. பாவம் அவைகளுக்குத் தெரியுமா தன்னைப் பெற்றெடுத்தவர்களின் பரிதாப நிலைமை? தங்கசாமி தன்னுடைய கஷ்டகாலத்திலும் அந்தப் பசலைகள் வெம்பிவிடாதபடி பாதுகாத்து வந்தான். இனிமேல் அவர்களை எப்படிப் பாதுகாப்பது என்பதுதான் அவனுக்குப் பெரிய புதிராக இருந்தது. இந்த வேளைப் பசியை எப்படிப்போக்குவது என்ற பிரச்சனையில் மூழ்கியவாறே நடந்து கொண்டிருந்ததால் அவன் முதுகில் தொங்கிய கந்தல்துணி மூட்டையின் பாரம்கூட அவனுக்குத் தெரியவில்லை. தன்னுடைய கோலத்தைக் கண்டு குலைக்க வரும் நாய்களை விரட்டுவதற்காகக் கையில் வைத்திருந்த குச்சியை ஊன்றிக் கொண்டே கிராமத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான். ஆனால் அவன் மனைவி தங்கமோ நெடுந்தொலைவு நடந்த களைப்பினால் சோர்ந்து போய் பின்தங்கி வந்து கொண்டிருந்தாள். தங்கத்தோடு சேர்ந்து போவதற்காக குடை போல் விரிந்து குளிர்ந்த நிழலைத் தந்துகொண்டிருந்த ஆலமரத்தின் நிழலில் குழந்தைகளை இறக்கிவிட்டு, பாரம் குறைந்ததனால் வெளிவந்த பெருமூச்சை விட்டுக் கொண்டே