பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி

வேப்பம் பழம் * 327

"அப்படி அவள் சொல்லலையானாலும் எனக்குத் தோண்றது” என்றாள் அவர் மனைவி. சாயங்காலம் சாவடியில் தற்செயலாகக் கிராம முன்சீப் ரத்னம்பிள்ளையைச் சந்தித்தார் சிற்சபேசன். பட்டுவைப் பற்றி ஏதோ பேச்சு வந்தது.

“எனக்கு அந்தப் பெண் பேரிலே தனி அனுதாபம் சார்! இதுவரை எப்படியோ நாலு வீட்டில் காரியம் செய்து தன்னையும் தன் தம்பிப் பயலையும் காப்பாத்திக் கிட்டுது. இனிமே அது முடியற காரியமில்லையே? துக்கிரிப்பய கிராமம், ஏழைப்பட்ட பெண்ணைப் பற்றி என்ன வேணாலும் பேசும் பெரிசான பொண்ணு வீடு வீடா நுழைஞ்சு வேலை செய்யறது நல்லா இருக்காது. இனிமே எப்படிக் காலம் தள்ளப் போகுதோ?” என்று ரத்னம்பிள்ளை ஏக்கம் நிறைந்த குரலில் சிற்சபேசனிடம் சொன்னார். "எனக்கும் அதுதான் யோசனை" என்றார் சிற்சபேசன்.

ஆனால் பட்டு இந்த மாதிரி எதையுமே யோசிக்கவில்லை என்பது நாலாவது நாள் விடிந்ததும் தெரிந்தது.

இருள் பிரியும் நேரம். காலைக் குளிர் நீங்கவில்லை. மப்ளரை இழுத்துக் கட்டிக் கொண்டு வாசல் பக்கம் வந்த சிற்சபேசன், வேப்ப மரத்தடியில் விளக்குமாறும் கையுமாக நின்று கொண்டிருந்த பட்டுவைப் பார்த்துத் திகைத்துப்போனார்.

நீராடிய கூந்தலை அவள் அள்ளிச் செருகிக் கொஞ்சம் செவந்திப்பூ வைத்திருந்தாள். கைகளில் அவர் மனைவி கொடுத்த புதிய கண்ணாடி வளையல்கள் குலுங்கின. புதிய சீட்டிச் சிற்றாடையும் கட்டிக் கொண்டிருந்தாள்.

‘ரத்னம்பிள்ளைகூட அப்படிச் சொன்னாரே! ஒருவரையும் கலந்து யோசனை கேட்டுக் கொள்ளாமல் இந்தப் பெண் இன்னும் இப்படி விளக்குமாறும் கையுமாக வந்து நிற்கிறதே?' என்ற சிந்தனையோடு வேப்பமரத்தடிக்குப் போனார் சிற்சபேசன்.

“சார்! உங்க வீட்டிலேயிருந்து மாமி வந்து என்னை ரொம்பப் பெருமைப்படுத்தினாங்க என்னாலே வீண் கஷ்டம். நாலு நாளா நான் வராமல் வாசல் பெருக்க முடியாமல் சிரமமாயிருந்திருக்கும். குப்பை சுமந்து போச்சு” என்று வழக்கமாகப் பேசுவதுபோல் ஆரம்பித்தாள் பட்டு.

"அது சரி, பட்டு! நான் ஒண்ணு கேக்கணும் உன்னை. தப்பா நினைச்சுக்க மாட்டியே!”

“என்ன சார்?” “இனிமே நீ இப்படி வீடு வீடா வாசற் பெருக்க வர முடியுமா? பெரிய பெண்ணாயிருக்கே. ரத்தனம்பிள்ளைகூட எங்கிட்டச் சொன்னார். ஊரார் நாலு தினுசாப் பேசறவங்கன்னு.”

பட்டு பெருக்குவதை நிறுத்திவிட்டு அவர் முகத்தைப் பார்த்துச்சிரித்தாள்.அந்தச் சிரிப்புக்குத்தான் எத்தனை அர்த்தம்?

“சார் எனக்கெல்லாம் இப்படிப் பெருமை கொண்டாடிட முடியுமா? உழைச்சு வயிறு நிரப்பியாகணும். தம்பியைப் படிக்க வைக்கணும்னு நான் வைராக்கியம்