பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி தூக்கம் * 31 உட்கார்ந்தான். அப்பொழுது சூ.சூ சூ. என்ற சப்தம் பக்கத்தில் இருந்த தென்னந்தோப்பில் இருந்து வந்தது. சத்தம் கேட்கும் திசையைப் பார்த்தான் தங்கசாமி. பத்துப் பன்னிரண்டு குரங்குகள் இளநீர்க் காய்களைத் திருடிக் கொண்டு தென்னந் தோப்பிலிருந்து ஆலமரத்தை நோக்கி ஓடிவந்தன. அதைப் பார்த்த அவன் இந்தக் குரங்குகள் செய்த பாக்கியம்கூட நாம் செய்யவில்லையே என்று எண்ணி நொந்து கொண்டான். உண்மையிலேயே அவன் நிலை குரங்கைவிட மோசமாகத்தான் இருந்தது. குரங்கு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மனிதனாக மாறியதாக டார்வின் என்ற பெரியார் கூறியிருக்கிறார். ஆனால் அந்த முன்னேற்றத்தினால் என்ன பிரயோஜனம்? மனிதன் குரங்கைவிட மோசமாகச் சில சமயங்களில் மதிக்கப்படுகிறானே. குரங்குகள் தன் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக இளநீர்க் காய்களை திருடியது. அதைக் கண்ட தோட்டக்காரன். சூ. சூ. என்று அவைகளை விரட்டியடித்தான். அவ்வளவுதான், குரங்குகள் திருடிய அந்த இளநீர்க் காய்களை திரும்ப அடைவதற்கு அவன் எந்த முயற்சியும் செய்யவில்லை.ஆனால் தங்கசாமி தன் பசிக்காக-வேண்டாம்; குழந்தைகளின் பசிக்காக ஒரு இளநீர்க் காயைப் பறித்துவிட்டால் சும்மா விடுவானா தோட்டக்காரன்? குழந்தைகள் இருவரும் குரங்குகளைக் கண்டு சந்தோஷ மிகுதியால் கை தட்டிக் கொண்டு குதித்தார்கள். ஆனால் தங்கசாமி மாத்திரம் கல்லை எடுத்துக் கொண்டு எதிர்த் திசையில் இருந்து வேகமாகக் குரங்குகளை விரட்டினான். எங்கிருந்து அவனுக்கு அவ்வளவு சக்தி வந்ததோ தெரியவில்லை. அவ்வளவு வேகமாக ஓடி குரங்குகளை விரட்டினான். பசி அதிகமாக இருக்கும்பொழுது சக்தியும் அதிகமாக இருக்குமோ என்னவோ! - சிறிது தூரம் குரங்குகள் இளநீர்க் காய்களைத் தூக்கிக் கொண்டு ஒடின். தங்கசாமியும் அவைகளை விடுவதாக இல்லை. தொடர்ந்து விரட்டினான். இந்தப் பந்தயம் சுமார் அறுபது, எழுபது கெஜ தூரம் நடந்திருக்கும். ஆபத்து அண்மையில் வந்துவிட்டதை உணர்ந்த குரங்குகளில் சில இளநீர்க் காய்களைப் போட்டுவிட்டு ஓடின. அவ்வளவுதான்! தங்கசாமியின் முகம் சந்தோஷத்தால் புடம் போட்டு எடுக்கப்பட்ட தங்கத்தைவிடப் பிரகாசமாகியது. இளநீர்க் காய்களையெல்லாம் ஒன்று சேர்த்தான். எண்ணிக்கையில் அவைகள் ஏழாக இருந்தன.தலைக்கொன்றாக வைத்துக் கொண்டாலும் மூன்று மிச்சம் இருந்தது. அதனால் கொஞ்சம் தாராளமாகவே இளநீர் குடிக்கலாம் என்ற ஆசையில் கக்கங்களில் இரண்டும் கையிலே ஐந்துமாக எடுத்துவந்தான். அப்பொழுது ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்த தங்கம் அவனை ஆச்சரியத்தோடும் சந்தோஷத்தோடும் பார்த்தாள். நடந்த வேடிக்கையைக்கூடச் சொல்லாமல், தங்கசாமி பக்கத்தில் இருந்த கருங்கல்லில் இளநீர்க் காய்களை மோதி அதன் மட்டைகளை நீக்கி இளநீரைப் பகிர்ந்து குடும்பத்தோடு குடித்தான். -