பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / புதிய விளம்பரம் * 331

கவருவதுபோல் அரங்கமைப்பு செய்து புன்னைமரக் கிளையில் தம் கடைப் புடைவைகளைத் தொங்கவிட்டிருப்பார். இப்படி எத்தனை எத்தனையோ புதுக் கவர்ச்சி முறைகளைக் கொண்டு தீபாவளி வியாபாரத்தை அபிவிருத்தி செய்வார். ஆனால் கவர்ச்சி என்கிற அம்சம் காய்ச்சின பாலைப் போல் என்பது வராகமூர்த்திக்கு நன்றாகத் தெரியும்.சீக்கிரம் திரிந்துவிடும் அல்லது புளித்துப்போகும்.பின் மறுபடியும் புதுப் பால் கறந்து காய்ச்சினால்தான் உண்டு. நேற்று எது ஜனங்களைக் கவர்ந்ததோ அதனுடைய கவரும் ஆற்றல் நேற்றோடு தீர்ந்தது. இன்றைக்குப் புதிதாகவும் அதிக வேகமாகவும் கவர வேறு ஒன்று வர வேண்டும். நாளைக்கு அதைவிட ஆற்றலுள்ள வேகமுள்ள புதிய அம்சம் வரவேணும். 'விளம்பரம்' என்கிற தத்துவம் இதுதான். 'அலங்காரக் கண்ணாடிப் பெட்டி' விளம்பரத்திற்கு இந்த ஆண்டு அதிகக் கவர்ச்சியுள்ள அம்சம் வேண்டுமென்று நினைத்தார் வராகமூர்த்தி.கல்கத்தாவிலிருந்து விளம்பரக் கம்பெனிகள் பலவற்றுக்கு ஆலோசகரான பிரெஞ்சு நாட்டுச் சித்திரக்காரனை வரவழைத்தார்.

அவன் தன்னோடு கல்கத்தாவில் இருந்து ஏராளமாகப் படங்கள், பத்திரிகைக் கத்தரிப்புகள், மாதிரி விளம்பரச் சித்திரங்கள் எல்லாம் வாரிக் கொண்டுவந்திருந்தான். பெரிய பெரிய விலையுயர்ந்த பலகைகளை அளவாகக் கத்தரித்து பின்புறம் சட்டமடித்து இணைத்துக்கொண்டு சித்திர வேலையைத் தொடங்கினான். தன்னைத் தவிர வேறு யாரையும் மேற்படிப் பெட்டிப் பக்கம் நெருங்கவிடவில்லை. அவன் தனிமையில் இல்லாவிட்டால் அவனுக்கு வேலை ஒடாதாம்; அவன் புதுப்பித்துக் காட்டப் போகும் கவர்ச்சிகரமான புருமையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் வராகமூர்த்தி.

"வெகு நாட்களாக என் மனத்திலிருந்த ஒரு அதியற்புத அழகை உங்கள் 'ஷோ கேஸி'ல் உருவாக்கிக் காட்டப் போகிறேன்!” என்று புதிர் வேறு போட்டிருந்தான் அந்த அபூர்வ ஒவியன். பதினைந்து நாட்களை முழுமையாக எடுத்துக் கொண்டான் அவன்.

“வேலை முடிந்து விட்டது. நாளைக்கு ஷோ கேஸைத் திறந்து விடலாம்” என்று முக மலர்ச்சியோடு வந்து சொன்னான் ஒவியன். "நீயும் வா பப்பீ; ரொம்பத் திறமையான ஒவியர். பிரமாதமான ஏதோ செய்திருக்கிறார்; பார்க்கலாம்” என்று தம் பெண்ணையும் அழைத்துக் கொண்டு வந்தார் வராக மூர்த்தி.

வராக மூர்த்தியையும், அவர் பெண்ணையும் அலங்காரக் கண்ணாடிப் பெட்டிக்குள் கூட்டிச் சென்றார் ஜவுளிக்கடை மானேஜர்.

உள்ளே போய், பலகையில் சட்டமடித்து நிறுத்தியிருந்த படத்தைப் பார்த்தவுடன், மூன்று பேரும் திகைத்து விட்டனர்.

வராகமூர்த்தி ஒன்றும் புரியாமல் விழித்தார்.

பப்பி விளையாட்டுடையில் பூப்பந்து மட்டையை ஓங்கிக் கொண்டு ஒயிலாக நிறுத்திய கோலத்தில் எடுத்த படம் பெரியதாக்கப்பட்டு அந்தப் பிளைவுட்