பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / தூக்கம் * 33 அந்தக் காட்சியைப் பார்த்த தங்கசாமியின் உள்ளத்தில் ஒரு எண்ணம் உதித்தது. உடனே துள்ளியெழுந்தான். உள்ளே ஓடினான்.ஒரு கிழிந்த வேட்டியை எடுத்துப் பை போல் கட்டி பசிக்கு ஆலம்பழம் பொறுக்கித் தின்று கொண்டிருந்த தன் மகனை இழுத்து வந்து அவன் முதுகிலே தொங்கவிட்டான். பசியால் சோர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மூன்றாண்டுகள் நிரம்பிய தன் மகனை அந்த இளந்தளிரை எழுப்பினான். அந்தக் குழந்தை தூக்கக் கலக்கத்தில் இமைகளை மூடி மூடித் திறந்தது. கலயத்தில் இருந்த நீரில் தன் மேல்துண்டை நனைத்து குழந்தையின் கண்களைத் துடைத்துத் தூக்கத்தைத் தெளிய வைத்தான்.பிறகு தன் எதிரே இரு குழந்தைகளையும் நிற்க வைத்துப் பாட்டு சொல்லிக் கொடுத்தான். அந்தப் பிஞ்சு நெஞ்சங்கள் பாட ஆரம்பித்தன. "ரகுபதி ராகவ ராஜா ராம் பதீத பாவன சீதா ராம்” இன்னும் சில அடிகளைச் சேர்த்துதான் தங்கசாமி சொல்லிக் கொடுத்தான். ஆனால் அந்த மழலைகள் இந்த இரண்டடிகளைத் தவிர மற்ற அடிகளைச் சொல்ல இவ்வளவாவது வந்ததே என்ற எண்ணத்தோடு அந்த இரண்டடிகளையும் பலமுறை பாடச்சொல்லிப்பழக்கப்படுத்தினான். இறுதியில் தான் பெற்றெடுத்த அந்த வடிக்கும் நீர் முத்துக்களைத் துடைத்துக் கொண்டு தைரியம் கூறி வழியனுப்பி வைத்தான். அந்தப் பசுந்தளிர்கள் பழக்கமில்லாத காரணத்தால் தயங்கித் தயங்கி திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றன. அந்தக் காட்சியைக் காணச் சகிக்காமல் குமுறி வந்த அழுகையை நீர்சொட்டும் கண்களைத் திரும்பி மறைத்துக் கொண்டான்.அப்பொழுது சற்று தூரத்தில் பாத்திரம் துலக்கி சம்பாதித்த காசில் குழந்தைகளுக்கு இட்லி வாங்கி வரும் தன் மனைவியைக் கண்டான். அவளிடம் இந்த ஈனச் செய்கையைச் சொல்ல தைரியம் இல்லாதவனாய் அவள் அருகே வந்ததும் அழுதேவிட்டான். தங்கசாமியின் வாயிலாக கொஞ்சம் கொஞ்சமாக விஷயத்தைத் தெரிந்து கொண்ட தங்கம் அவன் செய்தது சரிதான் என்று கூறி தங்கசாமியைச் சமாதானப்படுத்தினாள். சிறிது நேரத்திற்கெல்லாம் ஒடேந்திச் சென்ற அந்த ஒவியக் குழந்தைகள் ஒன்பது காசும் வட்டியில் சிறிது சோறும், பையில் கொஞ்சம் அரிசியும் கொண்டு வந்தன. அதை நிரந்து சாப்பிட்டு அன்றையப் பொழுதைக் கழித்தார்கள். மக்களையும் வெளியே அனுப்பி அவர்கள் சம்பாதித்து வருவதைச் சாப்பிட வேண்டியிருக்கிறதே என்ற அவமானத்தை அவனால் தாங்க முடியவில்லை. பலவிதமான எண்ணங்கள் அவனுள்ளே படமெடுத்து ஆடின. - - குழந்தைகள் பிச்சை எடுக்கச் சென்ற இடத்தில் “எந்தப் பாவிமகன் உங்களைப் பெற்று இப்படி நடுத்தெருவில் பிச்சை எடுக்கவிட்டானோ, ஐயோ பாவம்' என்று நா.பா. - 3