பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / தனி ஒருவனுக்கு 349

கையில் டார்ச் லைட்டுடன் வெளியே வந்தேன். வாருங்கள் போகலாம் என்று நண்பர் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு, கிழக்கே பண்ணையார் வீட்டுக் கொல்லையை நோக்கி நடந்தேன்.

நாலைந்து நாட்களுக்கு முன் நான் முத்துக்காளைக்காகப் பண்ணையாரிடம் பரிந்துகொண்டு போக நேர்ந்த அந்தச் சம்பவம், மீண்டும் என் நினைவிற் படர்ந்தது.

முத்துக்காளை, அடிநாளில் நிலங்கரைகளோடு எங்கள் குடும்பம் செல்வம் கொழித்தபோது, வீட்டோடு இருந்த பண்ணை ஆள். அந்தக் காலத்தில் நான் சிறு பிள்ளையாக இருந்தபோது என்னை எத்தனை முறை உப்பு மூட்டை சுமந்து' காட்டியிருக்கிறான் அவன்? சின்ன ஐயா சின்ன ஐயா!' என்று என் மேல் உயிராக இருந்திருக்கிறான். பிற்காலத்தில் கடனும் உடனும் பட்டு எங்கள் குடும்பம் சீரழிந்தபோது, அப்பா நிலங்கரைகளை ஒவ்வொன்றாக விற்றதும், குடும்பத்தில் நொடிப்பு ஏற்பட்டதும் பெரிய கதை. அந்தச் சமயத்தில்தான் முத்துக்காளை எங்கள் வீட்டில் பார்த்து வந்த பண்ணையாள் உத்தியோகத்தை இழந்து வெளியேற நேர்ந்தது. ஊரில் எங்கோ ஒரு மூலையில் அவனுக்குக் கால்வேலி நிலமிருந்தது.அதில் பாடுபட்டுக் காலத்தைத் தள்ளிக் கொண்டிருந்தான். அதன் பின் நான் தலையெடுத்ததும், படித்ததும், சொந்த ஊரிலேயே பஞ்சாயத்து போர்டு நிர்வாக ஆபீஸர் என்று ஒரு உத்தியோகத்தைத் தேடிக் கொண்டதும் இங்கே விவரிக்க வேண்டாதவை.

நான் உள்ளூரிலேயே வீட்டோடு இருந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தாலும் முத்துக்காளை எப்போதாவதுதான் அபூர்வமாகக் கண்ணில் தட்டுப்படுவாள்.

"சின்ன ஐயா! செளக்கிமா இருக்கீங்களா? அப்பாரு காலத்தோடு ஊரு விட்டது என்று எங்கேயாச்சும் போயிடாமல், நம் ஊருக்கே வந்தீங்களே சந்தோசம்; என்பான்.

நாலைந்து நாட்களுக்கு முன்னால் ஒருநாள் காலை முத்துக்காளை வீடு தேடிக்கொண்டு என்னைப் பார்க்க வந்து சேர்ந்தான். 'வா முத்துக்காளை! என்ன சங்கதி? இவ்வளவு அதிகாலையிலே வந்தாய் என்றேன்.அவன் கூறிய செய்தியிலிருந்து அவனுடைய இக்கட்டான நிலை எனக்குப் புரிந்தது.

போனவருஷம் கோடையில் பண்ணையாரிடம் புரோநோட்டு எழுதிக்கொடுத்து முன்னூறு ரூபாய் கடன் வாங்கினானாம். அது இந்த வருஷம் ஆரம்பத்தில் வட்டியும் முதலுமாக முந்நூற்றெழுபத்தைந்து ஆகிவிட்டதாம். மகளைக் கலியாணங் கட்டி கொடுப்பதற்காக இன்னும் இருநூறு ரூபாய் வாங்கினானாம். ஆகக்கூடி இன்றையக் தேதியில் அறுநூறு ரூபாய் வரை முத்துக்காளை பண்ணையாரிடம் கடன் பட்டிருந்தான். ஒரு வாரத்துக்கு முன்னால் பண்ணையார் கூப்பிட்டு விட்டாராம், போய் என்னவென்று கேட்டானாம். உன்னாலே எப்ப ரொக்கம் கொடுத்து என் கடனை அடைக்க முடியப் போகிறது? பேசாமல் இன்னம் நூறோ, இருநூறோகையில் தருகிறேன். வாங்கிக்கொண்டு, உன்னுடைய நிலத்தைக் கிரய சாசனம் செய்து கொடுத்துவிடு நீயாகச் செய்து கொடுக்க மறுத்துவிட்டால், அதை நான் கோர்ட்டு