பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34நா. பார்த்தசாரதி சிறுகதைகள் ════════════════

நா. பார்த்தசாரதி சிறுகதைகள் ஊரார் குழந்தைகளைப் பார்த்து கண்டன இரக்கம் பேசுவதுபோல் ஒரு பிரமை, பைத்தியம் பிடித்தவன் போல் தலை மயிரைப் பிய்த்துக் கொண்டான் தங்கசாமி! தன் மனைவி வேலை செய்யச் சென்ற இடத்தில் அவள் அழகை வேற்று ஆண்கள் ஏற இறங்கப் பார்ப்பது போன்ற ஒரு தோற்றம் அவ்வளவுதான்! தங்கசாமியால் தாங்க முடியவில்லை. எழுந்தான். எங்கேயோ ஒடினான். கால் போன போக்கில் களைத்துச் சோரும்வரை ஓடினான். பிச்சை எடுக்கச் சென்ற குழந்தைகள் பெரியவர் ஒருவர் பின் தொடர வருவதைக் கண்டாள் தங்கம். எழுந்து நின்று வரவேற்று விசாரித்தாள். அதற்கு வந்தவர், தான் அந்த ஊரில் உள்ள இந்து அனாதை ஆசிரமத்தின் தலைவர் என்றும் குழந்தைகளை ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ள அனுமதி கேட்கவே வந்ததாகவும், தங்கம் விரும்பினால் ஆசிரம வேலைகளைச் செய்து கொண்டு ஆசிரமத்திலேயே இருக்கலாம் என்றும் கூறினார். இதைக் கேட்டதும் தங்கத்திற்கு உண்டான ஆச்சர்யத்தில் பேச்சே வரவில்லை. இந்த விஷயத்தைத் தங்கசாமியிடம் சொல்லுவதற்கே மரத்தடிக்கு ஓடினாள்! ஆனால் அவன் அங்கே இருந்தால்தானே!. . விஷயத்தை ஊகித்தறிந்து கொண்ட பெரியவர், “கலங்காதேயம்மா, நான்தான் தங்கசாமியை என் நண்பரிடம் அனுப்பியிருக்கிறேன். அவனுக்கு நல்ல வேலையும் நிறைய சம்பளமும் கிடைக்கும்” என்று சொல்லித் தேற்றி அவர்களை ஆசிரமத்திற்கு அழைத்துப் போனார். ஆசிரமத் தலைவர் தங்களைத் தேடி வந்து உதவி செய்வது எதனால் என்பது தங்கத்திற்குத் தெரியப்போகிறதா என்ன?. வழக்கம்போல் அன்று அதிகாலையில் எழுந்த ஆசிரமத் தலைவர் காவேரியில் நீராட ஆலமரப் படித்துறைக்குப் போனார். ஆனால் அங்கே அவர் கண்டது என்ன?. அந்த ஆலமரம் வழக்கம்போலத்தான் தன் விழுதுத் தோரணங்களைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்தது.ஆனால் அவற்றிலே ஒரு விழுதிற்கு மிகுந்த பேராசை போலிருக்கிறது.விரைவாக வளர்ந்துநிலமகளினைத் தீண்டுவதற்காக அருகே வந்த ஒரு மனிதக் கொடியைச் சுருக்கிட்டு முடிந்து கொண்டு நீளமாக வளர்ந்திருந்தது. அவனும் அதன் அன்புப் பிணைப்பிலே மயங்கியவனாய் தூங்கிக்கொண்டிருந்தான். தென்றல் தன் நீண்ட கரங்களை நீட்டிப் பறவைகள் இடும் சப்தத்தால் அவன் விழித்துக் கொள்ளாமல் இருப்பதற்காக அவனைத் தாலாட்டிக் கொண்டிருந்தது. காதிற்கு இனிமையான ஜலதரங்க தாலாட்டுப் பாட்டை இசைத்தவாறு காவேரி ஒடிக் கொண்டிருந்தது. இவ்வாறு தென்றலின் மிருதுவான அசைவும், காவேரியின் தாலாட்டும் கிடைத்துவிட்டால் இடிஇடித்தாலும் தெரியாதவாறு எந்த மனிதன்தான் துரங்கமாட்டான்? அவன் தூங்கிய விதம்தான் விநோதமாக இருந்தது. நின்றபடியே தூங்கிக் கொண்டிருந்தான். இதைவிட அழகாக அதிக வசதியோடு இயற்கை அன்னையால்