பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி ! தூக்கம் * 35 தொட்டில் கட்டித்தர முடியுமா என்ன? நின்றபடியே தூங்குவது முதலில் சிறிது சிரமாக இருந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது...! அவனும் எவ்வளவோ முறைகள் தன் வாழ்நாளில் தூங்கியிருக்கிறான். ஆனால் இது போன்ற இயற்கைத் தூக்கத்தின் சுகத்தை இதற்குமுன் என்றாவது அவன் அனுபவித்திருக்க முடியுமா? ஆசிரமத் தலைவர் அவனைப் பற்றிய தகவல்களையெல்லாம் சேகரித்தார். அவன் தறிகார தங்கசாமி என்று தெரியவந்தது. 'பாவம் உலகத்தோடு போராட இவனுக்குச் சக்தி இல்லை. பயந்து பின் வாங்கியிருக்கிறான். உலகம் கொன்றுவிட்டது என்று எண்ணி இரக்கப்பட்டு அவனை அடக்கம் செய்ய எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். அப்பொழுது தூரத்தில் இருந்தபடியே பூஊம்.ம் என்று தன் வெற்றிச் சங்கநாதத்தை ஊதித் தீர்த்தது ஆலை. பிறகுதான் ஆசிரமத் தலைவர் தெருவில் ஒடேந்தி வந்த குழந்தைகளை அழைத்துக் கொண்டு தங்கத்தைக் காண வந்தார். தங்கத்திற்குத் தன் சாமி எப்பொழுது வருவார் என்று தெரிந்து கொள்ள ஒரே ஆவலாக இருந்தது. ஆவலை அடக்க முடியாமல் கேட்டும் விட்டாள். பலவிதத் துன்பங்களால் துளைக்கப்பட்டுப் புண்ணான அந்த மென்மையான நெஞ்சத்தை மேலும் துன்புறுத்த விரும்பாத அந்த நல்ல மனம் நிறைய சம்பாதித்துக் கொண்டு ஒரு மாதத்தில் திரும்பி வருவான்’ என்று சொல்லி வைத்தது. -- தங்கமும் மனதிற்குள் அப்பனே முருகா! அவருக்கு கஷ்டங்கள் வராமல் நீதான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். (தமிழ்ப் பொழில், 1955)