பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

368 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

பதிலும் வரவில்லை. அவளும் வரவில்லை. பரிபூரணம் தலையைப் பிய்த்து விட்டுக் கொண்டான். அவனுக்கு வெறி பிடித்தது. பாடுபட்டு எழுதிய கவிதையைக் கிழித்தெறிந்தான். பேனாவை உடைத்தெறிந்தான். மாடியிலிருந்து கீழே இணைத்த தண்ணீர்க் குழாயைப் பிடித்துக் கொண்டு இறங்கிப் பொன்னியின் குடிசைக்கு ஓடினான். அவள் அவனை நோக்கிச் சீறினாள்:

"நீங்கள் மேலே இருக்கிறீர்கள்! உங்களுக்குக் கீழே இறங்கி வர மனமிருக்காது.”

"இல்லை! நான் கீழேயே வந்து விட்டேன்.இனிமேலே போகிற நோக்கம் இல்லை. மண்ணில்தான் வாழப் போகிறேன்; மழையில்தான் நனையப் போகிறேன்” என்று அந்தப் படத்தின் கதாநாயகன் பரிபூரணம் பேசினான்.

மறுபடியும் அவன் மேலே ஏறிப் போகவே இல்லை!

(தாமரை, மார்ச், 1960)