பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி பச்சைக் குழந்தைகள் * 385

இன்னிக்கு ராஜு விளையாட்டுக்கு வரமாட்டான். நான்தான்.அப்பா. நீதான் அம்மா'ன்னு அந்தக் கரிமூஞ்சி அசத்து வந்த பல்லை இளிச்சிண்டு நின்னுது. 'நீதான் அப்பாவா? அப்படியானால் இந்தா, இதை வாங்கிக் கோ'ன்னு பளீர்னு ஒண்ணு விட்டேன் கன்னத்திலே பப்ளிமாஸ் மூஞ்சி ஒரு பக்கத்திலே வீங்கிட்டுதுடா ராஜு!”

“நெஜமாவா? நீ எதுக்குடி அவனை அடிச்சே?” என்று கேட்டேன்.

“தப்புத்தாண்டா. அவனை விட்டுப்பிட்டு இப்படிச் செஞ்சதுக்காக இங்கே வந்து உன்னை அடிச்சிருக்கணும்.” நீ பெரிய வாய்க் கொழுப்புக்காரிடீ மாயா!

'நீ மட்டும் இலேசுப்பட்டவனோ? கல்லுளி மங்கனா இருக்கிறது. திடீர்னு இந்த மாதிரித் தத்துப்பித்தென்று ஏதாவது பண்ணி வைக்கிறது. நான் உன்னோட 'டூ’ விட்டுட்டுப் போகலாம்னு தான் இப்ப வந்திருக்கேன்”

“வேண்டாண்டி! இந்த ஒரு தடவை மன்னிச்சுப்பிடு, உன் காலைப் பிடிச்சுக் கேட்டுக்கிறேன்.”

திண்ணையிலிருந்து கீழே குதித்து அவள் காலைப் பிடித்து விட்டேன்.

“சீ. அசடு எழுந்திருடா, யாராவது பார்த்தாச் சிரிக்கப் போறா. அகத்துக்காரி காலை யாராவது பிடிப்பாளோ? பைத்தியம்டா நீ. காலை விடுடா, பெரிய வம்பாப் போச்சு உன்னோடே நான் டூ விடலை சேர்த்திதான். காலை விட்டுடு”

“பட்டுப்போல உன் கால் எப்பிடிடீ இத்தனை அழகாயிருக்கு?”

“பொம்மனாட்டி காலோ இல்லியோ, அப்பிடித்தான் இருக்கும்! உன்னை மாதிரியா அவுத்துவிட்ட கழுதையைப் போல ஊரெல்லாம் சுத்தறேன் நான்? வீட்டோட இருக்கேன். அலையறதில்லை. அதான் கால் இப்படி அழகா இருக்கு”.

"வாயை அடக்குடி ரொம்பத்தான் அதிகமாகப் பேசிண்டு போகாதே!'

"இவர் பெரிய ராஜா இல்லியோ? இவரை ரொம்பப் பேசப்படாது.”

"நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் ராஜாதாண்டி’'.

"அப்படியானால் நான் ராணி தாண்டா.

“ஏ ராணியம்மா!”

"ஒய் ராஜா சாகப்!”

“வவ் வேவ்வே!”

“வவ்வவ்வே!”.

“நான் வரேண்டா இன்னிக்கு விளையாட்டு இல்லே. 'சரியான அப்பா, இல்லை. அதனால் விளையாட்டுக் கிடையாது’ன்னு சொல்லி எல்லாக் குழந்தைகளையும் திருப்பி அனுப்பிச்சுட்டேன். நாளைக்காவது வந்துடு. நீ அப்பாவா வந்தால் தான் நான்

நா.பா. 1 - 25