பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / பச்சைக் குழந்தைகள் * 387

ஒரு நாள் இராத்திரி ஏழு மணி இருக்கும். மழை தூறிக் கொண்டிருந்தது. அமாவாசை இருட்டு. நான் வாசல் திண்ணையில் உட்கார்ந்து சிலேட்டுப் பலகையில் பாடம் எழுதிக் கொண்டிருந்தேன்."உஷ் என்று திண்ணைக்குக் கீழே இருட்டிலிருந்து பழக்கமான குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். “உஷ்- உன்னைத்தாண்டா ராஜு" சத்தம் போடாமல் என் பின்னோட வா.சொல்றேன்” என்று மாயா தலையை நீட்டிக் கூப்பிட்டாள்.

“இந்த மழையிலே எங்கேடி கூப்பிடறே? பாடம் எழுதிக் காண்பிக்காட்டா அப்பா தேலை உரிச்சிடுவேன்னு சொல்லிவிட்டுப் போயிருக்காரேடி!'

“எல்லாம் பெரிய பாடம்தான், தெரியும் அப்புறம் எழுதிக்கலாம்; முதல்லே எழுந்திருந்து வாடா!

அவள் கெஞ்சிக் கொண்டு சொல்லும்போதே எதையும் மறுக்க முடிவதில்லை. என்னவோ வசியம் பண்ணி, ஏதோ சொக்குப்பொடி போட்டு என்னை அப்படித்தன் கைப்பாவையாகப் பழக்கி வைத்திருந்தாள் அந்த மாயாக் கடன்காரி. அவள் என்னை ரொம்பப் பிரியத்தோடு கடிந்து கொள்கிற வார்த்தை, அட, தடிக்கடன்காரா!' என்பதுதான். நான் அவளைப் பிரியமாக அழைத்துக் கடிந்து கொள்கிற வார்த்தை கடன்காரி என்பதுதான்! 'உண்மையில் யார் யாருக்கு எந்த விதத்திலும் எவ்வளவு "கடன்பட்டிருந்தோம்' என்பது அந்த வாலை வயதில் எங்களுக்குத் தெரியாது.

எதற்காகக் கூப்பிட்டாளோ என்று அந்த இருட்டில் அவளோடு போய்ப் பார்த்தால் வேப்ப மரத்தடி வரை இழுத்துக் கொண்டு போய் நிறுத்திக் கொண்டு, ‘ராஜூ! இன்னிக்கு விற்கிறதுக்காகப் போட்ட முறுக்கிலே நாலு மிஞ்சிடுத்துடா, அதுலே ஒண்ணை' 'நீ சாப்பிடுடீ'ன்னு அம்மா எங்கிட்டே கொடுத்துட்டா. அதை நாம் ரெண்டு பேருமா சேர்ந்து சாப்பிட்டுடலாம்” என்றாள்.

“ஏண்டி! இதுக்காகவா இவ்வளவு தூரம் இந்த இருட்டிலே என்னை இழுத்தடிச்சே முறுக்குத் தந்தால் அதை நீயே சாப்பிடப் படாதோ? அந்த இத்தனூண்டு முறுக்கிலே எனக்குப் பங்கு தராட்டா என்ன குடிமுழுகிப்போயிடும்? நீ அசடுடீ"

"நீதான் அசடன்! இதைப் பாவாடையிலே மூடிக் காக்காக் கடி கடிச்சி இரண்டாக்கித் தாரேன். நீ பாதி எடுத்துக்க?

“ஐயய்யோ! எச்சில் இல்லியோ?”

“போடா முட்டாள் காக்காக் கடிக்கு ஒண்ணும் எச்சில் கிடையாது. வேணும்னா நீயே கடிச்சு ரெண்டாக்கிக் கொடு. நான் சாப்பிடறேன்.”

“வேண்டாம்டீ! நீயே கடிச்சுத் தந்துடு நான் பாதி எடுத்துக்கறேன்.”

"கடக் கடக்...”

"மெல்லடி பல்லை உடைச்சிக்காதே!."