பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி ஏணி * 37 இந்த நிலையில் நீங்கள் அவர்களைச் சந்தித்துப் பேசுவது என்று வந்தால், உங்கள் நிலை இன்னும் சீரியஸாக ஆகிவிடுமோ என்று எனக்குப் பயமாக இருந்தது.” “என்னைச் சந்திக்காமல் போகச் சம்மதித்திருக்க மாட்டார்களே?” “அதையேன் கேட்கிறீர்கள் ஸார்? காலேஜுகளில் படிக்கும் மாணவர்களைப் பற்றிய ஒரு பெரிய உண்மையையே நான் நேற்றுத்தான் தெரிந்து கொண்டேன். உங்கள் நிலையை நான் அவர்களிடம் உருக்கமாக விவரித்தபோது பெரும்பாலான பையன்கள் கண்ணிர் விட்டுவிட்டார்கள் ஸார் ‘எப்படியாவது அவருக்கு உயிரைக் கொடுத்து எங்கள் படிப்பைக் காப்பாற்றுங்கள் டாக்டர்’ என்று உங்கள் பையன்கள் என்னை மன்றாடிக் கேட்டுக் கொண்டபோதுதான் காலேஜில் உங்களுக்கும் உங்கள் மாணவர்களுக்கும் உள்ள தொடர்பு எனக்குப் புரிந்தது ஸார்! உங்களை அவர்கள் கண்டிப்பாகச் சந்திக்காமல் போகமுடியாது என்று வற்புறுத்தினார்கள். நான் விவரம் சொன்ன பின்பே சந்திக்காமல் போவதற்குச் சம்மதித்தார்கள்.” "அந்தச் செல்வாக்கில் எல்லாம் ஒன்றும் குறைவு இல்லை டாக்டர்.” “எதற்கும் பயப்பட வேண்டாம்! எல்லாம் நன்றாக முடியும் புரொபஸர் ஸார்! வரட்டுமா நான்' கூறிவிட்டு நகர்ந்தார் டாக்டர். அவர் சென்றதும், வழக்கமாக வீட்டிலிருந்து ஒவலும் பழங்களும் கொண்டுவரும் தம் பையனை இன்னும் காணவில்லையே! என்ற கவலை பேராசிரியர் ரகுநாதனுக்கு ஏற்பட்டது. சற்றைக்கெல்லாம் அவர் புதல்வன் மணி கையில் பிளாஸ்க், பழப்பை சகிதம் வார்டுக்குள் நுழைந்தான். - “ஏண்டாமணி இவ்வளவு நாழி?” 'அம்மாவுக்கு உடம்பு சரியில்லே அப்பா! நான்தான் அடுப்பை மூட்டிப் பாலைக் காய்ச்சி ஓவல் கலந்து கொண்டு வந்தேன் அப்பா' 'இந்தச் சமயம் பார்த்துத்தானா அவள் வேறு படுத்துக்கொள்ள வேண்டும்? எல்லாம் தலையெழுத்து. விதி: . - மணி சூடான ஒவலை பிளாஸ்கில் இருந்து கிளாஸில் ஊற்றி நீட்டினான். ரகுநாதன் வாயில் அடக்கிக் கொண்டிருந்த கோழையை ஜன்னல் வழியே துப்பி விட்டுக் கிளாஸைக் கையில் வாங்கினார். - - ஆஸ்பத்திரி நர்ஸ் கையில் ஒரு விஸிட்டிங்கார்டுடன் உள்ளே நுழைந்தாள். ஒவலைப் பருகிவிட்டுக் கிளாசைக் கீழே வைத்தார் ரகுநாதன். நர்ஸ் எதிரே விஸ்ட்டிங் கார்டுடன் நின்று கொண்டிருப்பதைக் கண்டார். கார்டை அவர் படுக்கைக்கு முன் இருந்த ஸ்டுலில் வைத்தாள் நர்ஸ். ரகுநாதன் அதை எடுத்துப் பார்த்தார். கே.எஸ்.நரசிம்மன், ஐ.ஏ.எஸ்.திருச்சி கலெக்டர். - - ரகுநாதனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. நரசிம்மன் இவ்வளவு தூரம் தன்னை நினைவு வைத்துக் கொண்டு பார்க்க வருவான் என்று அவரால் நம்பவும் முடியவே இல்லை. எத்தனையோ வருஷங்களுக்கு முன் பிரஸிடென்சி காலேஜில் படித்த அந்தக்