பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / பச்சைக் குழந்தைகள் * 391

"ஏன்? அதையும் அடுப்புக்குத்தான் போட்டீர்களோ என்று எடுத்துச் சொருவிட்டேன். நன்றாக எரிகிறது.”

“அடி பாவீ! மரப்பாச்சியை யாராவது அடுப்பில் சொருகுவார்களோ?” என்று ஆத்திரத்தோடு கேட்டேன்.

“எல்லாம் காரணத்தோடுதான் சொருகினேன். வாழ்கிற வீட்டிலே மூளி மரப்பாச்சி இருக்கக்கூடாது. வீட்டுக்கு ஆகாது என்பார்கள்.”

நான் அடுப்பங்கரையில் போய்ப் பார்த்தேன். உளுத்துப் புழுக்கூடு வைத்துப் போன அந்தச் செம்மரத்தில் தீ கொண்டாட்டத்தோடு எரிந்துகொண்டிருந்தது.

ஒருகணம் அந்தத் தீயின் ஜ்வாலைகள் ஒருமுகமாக மாறி மாயாவாகத் தோன்றி, 'நீ அப்பாவாக இல்லாவிட்டால் நான் அம்மா இல்லைடா ராஜா. நீ அகத்துக்காரன்; நான் அகத்துக்காரி என்று சிரித்தவாறே என்னிடம் சொல்வதுபோல் எனக்கு ஒரு மயக்கம் உண்டாயிற்று.

சர்வேசுவரா! எங்களைப் பச்சைக் குழந்தையாகவே பிறவி முழுவதும் அந்த வேப்ப மரத்தடியில் விளையாட விட்டிருக்கக்கூடாதோ? எங்களை ஏன் பிரித்தாய்? ஏன் வளர்த்தாய்?

(கல்கி, 10.7.1960)