பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

394 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

தொலைத்திருக்கிறது. சாதாரணமாக இப்படிப் பிச்சைக்கு வருகிற சிறுமிகளிடம் வழக்கமாக இல்லாத அழகாயிருந்தது அது!

அதிகம் வயதானவர்களை 'சார், சார்' என்றும், இளைஞர்களை, 'அண்ணா, அண்ணா' என்றும் உறவு கொண்டாடிப் பிச்சை கேட்கிறாள் சிறுமி. வழக்கமாகத் தினம் பார்க்கிற காட்சிதான். சிலர் காசு கொடுத்துவிட்டுப் போனார்கள். சிலர் பேசாமல் போனார்கள். சிறுமி பூப்பந்தாகத் துள்ளியும் ஒடியும், நடந்தும், காசு சேர்த்துக் கொண்டிருந்தாள்.வீதியில் நல்ல கூட்டநேரம்.கண்ணகி புத்தகநிலையத்தில் எவ்வளவு நேரம்தான் ஈ ஒட்டும் தொழிலைப் பொறுமையாகச் செய்து கொண்டிருக்க முடியும்?

மிலிடரி ஒட்டலில் சுறுசுறுப்பாக வியாபாரம் நடக்கிறது! சுகானந்தா பீடா ஸ்டாலில் வெற்றியும், காசும், சுருட்டப்படுகிறது. பிச்சைக்காரச் சிறுமி தள்ளி நிற்கும் தாயின் முகம் மலரத் தன் சாமர்த்தியத்தைக் காட்டி 'அண்ணா, அண்ணா' என்று கெஞ்சிக் காசு சேர்த்துக்கொண்டிருக்கிறாள். 'பாரத நாட்டு மாதர் திலகங்கள்' என்று அன்றைக்குத்தான் ஒரு சிறந்த நூல் கடைக்கு வந்திருந்தது. அதை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

“என்னைப் பெற்றவள் மட்டும் தாய் அல்லள். இந்தப் புண்ணிய பூமியில் பிறந்த ஒவ்வொரு பெண்ணும் என் தாய்! என்னோடு பிறந்தவள் மட்டும் சகோதரி அல்லள். இந்தப் புண்ணிய பூமியில் பிறந்த ஒவ்வொரு பெண்ணும் என் சகோதரி. எந்தப் பெண்ணுக்கு இழிவு நேர்ந்தாலும் அந்த இழிவில் ஒரு பங்கு என் தாய்க்கும், என் சகோதரிக்கும் வருகிறது.” என்று நூலின் முன்னுரையில் உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருந்தார் துறவியாகிய அந் நூலாசிரியர்.

நான் மனம் தோய்ந்து உணர்வுகள் தோய்ந்து கோவிலில் தெய்வச் சிலைக்கு மிக அருகில் நிற்கிறாற் போன்ற மெய்சிலிர்ப்புடன் இந்தப் பகுதியைப் படித்துக் கொண்டிருந்தேன்.

"அண்ணா! அண்ணா! நான் அனாதை அண்ணா - உதவி செய்யுங்கள்!” - அட்டகாசமாகச் சிரிப்பும், கும்மாளமுமாய் பீடா ஸ்டாலுக்கு வந்த நாலைந்து வாலிபர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் சிறுமி என் கடைவாசலில் யாரோ வந்து ஏதோ கேட்கவே, நான் 'பாரத நாட்டு மாதர் திலகங்களை' மூடி வைத்துவிட்டு நிமிர்ந்தேன்.

"இல்லற இன்ப ரகசியங்கள் இருக்குதா சார்?”

"இல்லை! திரு.வி.க. எழுதிய பெண்ணின் பெருமை இருக்குது. வேணுமா? அருமையாயிருக்கும்.”

“வேண்டாங்க நமக்கு அதெல்லாம் புரியாது” கேட்டு வந்தவர் போய்விட்டார்.

பீடாஸ்டால் வாயிலில் காளையர் சிரிப்பு இன்னும் ஒய்ந்தபாடில்லை. சிறுமியின் 'அண்ணா'க் கூப்பாடும் நிற்கவில்லை; காளையர் குழுவில் மைனர்போல்