பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

414 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

ஏறக்குறைய எல்லாருமே வந்துவிட்டார்கள். “போகாதீர்கள்! போனிர்களோ தொலைத்துவிடுவேன்” என்று ஹெட்மாஸ்டர் மிரட்டினார். அவருடைய மிரட்டலைப் பையன்கள் பொருட்படுத்தவில்லை. புது வாத்தியார் பின்னால் பையன்களில் முக்கால் வாசிப் பேர் நடந்துவிட்டார்கள். பயந்த சுவாவமுள்ள சில பையன்களும், பெண்களும், மட்டும் நின்றுகொண்டிருந்தனர்.

“என்ன சார் இது? பையன்களெல்லாம் திரும்புகிறார்கள். கூட்டம் இல்லாவிட்டால் மினிஸ்டரை அவமானப்படுத்தின மாதிரி இருக்குமே?” என்று ஹெட்மாஸ்டரிடம் கேட்டார் பஞ்சாயத்துத் தலைவர்.

“இந்தப் புதுவாத்தியார் அயோக்கியன் சார்! என்னமோ சொல்லிப் பையன்களை அழைத்துக் கொண்டு போகிறான்.இவனைத் தொலைத்தால்தான் ஸ்கூல் உருப்படும்!” ஹெட்மாஸ்டர் கொதிப்புற்ற குரலில் அங்கே கூடியிருந்த எல்லாப் பிரமுகர்களுக்கும் கேட்கும்படி இவ்வாறு பஞ்சாயத்துத் தலைவருக்குப் பதில் கூறினார். எல்லோரும் புதுவாத்தியார் மேல் தாங்க முடியாது கோபமுற்றனர். அவன். ஸ்ட் கட்சிப் பயலாம் சார்' என்று மேலும் வெடி வைத்தார் ஹெட்மாஸ்டர். புது வாத்தியாரை அடித்து நொறுக்க வேண்டும் போல் எல்லோருக்கும் கோபம் குமுறிற்று.

ஒரு வழியாக மினிஸ்டர் வந்தார். பூரண கும்பத்தை வாங்கினார். அவர் அதற்கு முன் பூரண கும்பம் வாங்கிப் பழக்கமில்லையாதலால் குடத்துக்கு மேலிருந்த தேங்காயைத் துக்கிப் பார்த்தார். அவருக்கு எதையும் உள்ளே திறந்து பார்த்துத்தான் வழக்கம். 'மினிஸ்டர்’ என்றால் பின் வேறு என்ன அர்த்தமாம்?

எல்லாம் தடபுடலாக முடிந்தன. வாழவந்தான்புரத்தில் சூரியன் அஸ்தமிக்கிறபோது மினிஸ்டரைப் பார்த்துவிட்ட பெருமிதத்தோடு அஸ்தமித்தான்.

சாயங்காலம் வீட்டுக்குத் திரும்பின அம்பியை அம்மா கேட்டாள் : “என்னடா மந்திரி வந்தாராமே, என்ன விசேஷம்?”

“போம்மா! மினிஸ்டர் இனிமே இந்த ஊருக்கு வரவே வேணாம். மினிஸ்டர் வந்தார்; புது வாத்தியாரை டிஸ்மிஸ் செய்துவிட்டார்கள். புது வாத்தியார் ரொம்ப நல்லவர் அம்மா” என்று அழுதுவிடுகிறாற்போன்ற குரலில் சொன்னான் அம்பி. ஆம்! அன்று ஒவ்வொரு பையனும் புது வாத்தியாருக்காக வாழவந்தான்புரத்தில் அழுதிருப்பான்.

(தாமரை, 1960