பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

420 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

என்று சிபாரிசுக் கடிதம் கொடுத்திருந்தார் பொன்னுரங்கத்தின் நண்பர். அவருக்கு அதைப் படித்தும் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

அந்தப் பெண்ணை மீண்டும் பார்க்கிறார். அவள் அழகாகச் சிரிக்கிறாள், இலட்சுமி படமே சிரிக்கிற மாதிரி.

காலையிலிருந்து பொய் பொய்யாகச் சொல்லி வறண்டு போயிருந்த அவர் உள்ளத்தில் சொல்ல முடியாத தவிப்புச் சேர்ந்து சுமந்து போய்க் கனத்ததே, அந்தக் கனத்தை எல்லாம் தன் சிரிப்பினால் கரைக்கிறாளா இந்தப் பெண்?

பொன்னுரங்கம் தமக்குள் சிரித்துக் கொள்கிறார். “பெரியவரே! ஒரு நிமிஷம் நீங்கள் மட்டும் இப்படி என்னோடு உள்ளே வாருங்கள்” என்று கிழவனை மட்டும் அழைத்துக் கொண்டு பொன்னுரங்கம் ஏர்கண்டிஷன் அறைக்குள் போகிறார். கிழவனுக்கு முகம் கொள்ளாமல் சிரிப்பும் குழைவும், நம்பிக்கையும் தோன்றி மலர்கிறது.

"அப்படி உட்காரும்.”

கிழவன் உட்காருகிறான். குளிர்சாதன அறைக்குள் நுழைவது கிழவனின் வாழ்வில் அதுவே முதல் தடவை.

“பெரியவரே இந்த நிமிஷம் நான் சொல்கிற உண்மையை உயிருள்ள வரையில் மறக்க மாட்டேன் என்று சபதம் செய்வீரா?”

கிழவன் மருள்கிறான். அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

"நீங்க எது சொன்னாலும் சரிங்க...."

“உம் பெண்ணைச் சினிமாவில் சேர்க்கிற எண்ணத்தை விட்டு விடும். ஊருக்குத் திரும்பிப் போய் நாலு வீட்டில் வேலை செய்து பிழைக்க விடுவதுகூடத் தப்பில்லை. இந்தத் தொழில் ஒரே பொய் மயமானது. என்னையே எடுத்துக் கொள்ளும். இன்று இந்த நிமிஷம் நான் வெறுங்கையன். சுற்றி ஒரே கடன். புதிதாகக் கடன் கொடுக்க ஆள் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.ஆனால் இந்த உண்மையை வெளியே சொன்னால் என் மானம் போய்விடும்.” பொன்னுரங்கத்தின் கண்களில் அழுகை வருவதுபோல் நீர் முட்டுகிறது.

கிழவர் மெல்ல எழுந்திருக்கிறார். “ஊர் திரும்ப பஸ் சார்ஜுக்குப் பணம் இருக்கிறதா?”

கிழவர் பதிலுக்கு உதட்டைப் பிதுக்கிறார். பொன்னுரங்கம் மணிபர்ஸைத் திறந்து கொட்டிப் பார்க்கிறார். அப்போதைக்கு அவருடைய ஆஸ்தி 47 ரூபாய் எட்டணாத் தேறுகிறது. முப்பது ரூபாயைக் கிழவனிடம் நீட்டுகிறார்.

“ஊருக்குப் போயி மானமாகப் பிழையும். இந்த நிமிஷம் நான் சொன்ன உண்மையை யாரிடமும் சொல்ல வேண்டாம்.போய் வாரும்.” கிழவர் நோட்டுக்களை