பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / நினைவில் இருந்து..453

வேறு வழியில்லை! அவளோடு அவளாக நானும் அந்த இருளில் ஒதுங்கினேன்! நினைவிலிருந்து அந்தக் கரையைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினேன்.

2

ஒரு வகையில் அது அனுபவம் இன்னொரு வகையில் அவஸ்தை. நான் மட்டும் ஸி.ஐ.டி.யாகப் பதவியேற்றுச் சரித்திரப் பிரசித்திபெற்ற அந்த ஆகஸ்டுப் பேராட்டத்தின் போது அரசாங்க சேவகம் புரிந்திராவிட்டால், இதோ இந்த அழகி ராஜம் எனக்கு மனைவியாக வாய்த்திருக்க மாட்டாள்.

எனக்கு அப்போது இருபத்தாறு வயது. 'இன்டர்' பாஸ் செய்துவிட்டுப் போலீஸில் எபி.ஐ.டி.இலாகாவில் நுழைத்திருந்தேன். வயதான தாய், நான், இருவரும்தான் என் குடும்பம். கலியாணத்தைப்பற்றி அம்மா அடிக்கடி நச்சரித்துக் கொண்டிருந்தாள். நான்தான் பிடி கொடுக்காமல் கடத்திக் கொண்டே வந்தேன்.

மூலைக்கு மூலை தேசபக்தர்களின் சதிக் கூட்டங்கள், ரயிலுக்கு வெடி, பாலத்துக்கு வெடி, போலீஸ் ஸ்டேஷனுக்கு நெருப்பு என்று எங்கு பார்த்தாலும் ஒரே பயங்கரம். ஒரு விநாடி ஒய்வு கிடையாது எங்கள் இலாகாவுக்கு. ஒய்வு ஒழிவின்றி அலைச்சலும் சுற்றலும், உளவு வேட்டையுமாக வாயில் ஈ புகுந்தது தெரியாமல் ஒடிக்கொண்டிருந்தோம். போலீஸ் இலாகாவுக்கு அது ஒரு துரதிர்ஷ்டம் பிடித்த காலமாக வாய்த்திருந்தது என்று பயப்படுமளவிற்கு நிலைமை மோசமாக இருந்தது. உயிரைத் திரணமாக மதித்து வெள்ளைக்காரனுக்கு ஊழியம் புரிந்தோம். அந்தச் சமயத்தில் நான் மணியாச்சி போலீஸில் ஸி.ஐ.டி. இன்ஸ்பெக்டராக இருந்தேன்.

இன்று, இப்போது நினைத்துப் பார்த்தால், அந்தத் தேசீய இயக்கமும் புரட்சியும் புனிதமான சுதந்திர வேள்வியாகத் தோன்றுகிறது. அன்று வெள்ளைக்காரன் ஏவிய வேட்டை நாய்களாக இருந்தோம் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, வெட்கமாகக்கூட இருக்கிறது.

ஆகஸ்டு மாத நடுவில் ஒரு நாள். இப்பேது தாழையூற்றுக்கும் திருநெல்வேலிக்குமிடையே கம்பீரமாக சிமெண்ட் தொழிற்சாலைகள் நிமிர்ந்து நிற்கும் பிரதேசம் அந்தக் காலத்தில் ஒரே கரிசல் காடு. கருவேல மரங்களும் உடை மரங்களும் பகலிரவு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாதபடி அடர்ந்து, காடு மண்டிக் கிடந்தன. அது கந்தக பூமி. ஒரே வெப்பும் வெடிப்புமாக இருக்கும். அது அசல் ஜாதி கருநாகங்கள் வசிப்பதற்கு இதமான பூமி.

மேற்படி கருவேலங்காட்டின் இடையே தேசபக்தர்களின் சதிகளுக்கு உபயோகப்படும் நாட்டு வெடிகுண்டுகளைச் செய்து வருவதாக ஒரு உளவு கிடைத்திருந்தது. கடம்பூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், இதில் முக்கியஸ்தனாகப் பொறுப்பேற்றுக்கொண்டு கருவேலங்காட்டிலேயே தங்கி, வசித்து வருவதாகவும் நம்பத் தகுந்த ஆள் மூலம் தகவல் எட்டியிருந்தது. இலாகா மேலதிகாரி, இதன் முழு விவரங்களையும் அறிந்து வரவேண்டிய பொறுப்பை என் தலையில் கட்டினார். நான் துணைக்கு ஒரு கான்ஸ்டபிளையும் அழைத்துக்கொண்டுபோனேன்.தாழையூற்றுக்கு