பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/480

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

478 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“அதைப் பற்றி என்ன வந்தது இப்போது? எல்லாருமே 'ப்ரக்ரஸிவ்வா' இருக்கணும்ங்கிற அவசியமென்ன?”

"அவசியமிருக்கிறதென்றுதானே எழுதிக் கொண்டு வருகிறீர்கள்? பதிலுக்கு நான் பேசவில்லை. மழை மேலும் பெரிதாகவே காரின் கண்ணாடிக் கதவை மேலே உயர்த்தினேன். நனைவதிலிருந்து தப்பினேன்.

பழைய தலைப்பை விட்டு இவள் பேச்சு என்னுடைய ஏதோ ஒரு கதையைப் புகழும் முயற்சியில் திரும்பியது.அந்தப் புகழ்ச்சியில் கூட என் மனம் இலயிக்கவில்லை. தங்களைப் புகழ்கிற காரியத்தையே ஏற்றுப்பதிலுக்குப் புகழும் ஆசாமிகளையும் நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய சிந்தனை எல்லாம், இந்த இரண்டு நாட்களாக எப்படி இவள் காரில் உட்கார்கிற அளவுக்கு நான் மலிந்து போனேன்? என் மனத்தின் எந்த மூலையில் ஆசைக்கு நழுவுகிற பலவீனம் இருந்தது?’ என்பதிலேயே சுழன்று கொண்டிருந்தது. சந்தோஷமாகக் காரில் சவாரி செய்ய என்னால் முடியவில்லை.

முன்தினம் போலவே அன்றைக்கும் என்னை நான் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கிவிட்டுப் போகிறபோது இவள் அதே பழைய சொற்களைச்சொன்னாள் :"சார்! மழைக்காலம் முடிகிறவரை என் காரிலேயே வந்துவிடுங்கள். எனக்குப் பெருமை. உங்களுக்கு உதவி”

ஒன்றும் சொல்லாமல் நான் சிரித்துக்கொண்டே இறங்கிப் போனேன். 'நம்முடைய மனத்தில் எங்கோ 'லீக்கேஜ்' கசிவு - அநாவசியமாக இருக்கிறது. அதைச் சரிப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய தவிப்பாக இருந்தது. இதற்கு முன்னால் மழைக்காலமே வராமல் இருந்ததா? நான் வெளியே நடந்து போகாமலா இருந்தேன்? இப்பொழுது மட்டும் ஏன் இந்த மாதிரி செளகரியப் பசையில் ஒட்டிக் கொண்டேன்’ என்று உள்ளத்தில் ஒரே குமுறல். இதற்கேற்றாற்போல் அன்றைக்கு ஒரு நண்பர் வேறு கேட்டுவிட்டார். “என்ன சார்? யாரோ காரில் கொண்டு வந்து விடுகிறார்கள் போலிருக்கிறது. நனையாமல் வந்து விடுகிறீர்கள்.”

மூன்றாம் நாள், நான்காம் நாள். எண்ணிக்கையின் பன்மைக்கு ஒரு பெருமை உண்டானால் பத்து நாளைக்கு நான் இவளுடைய காரில் ஏறி வந்திருப்பது அதிகமானதுதான். மழைக்கு நனையாமல் வந்திருக்கிறேன் என்பது உபரி லாபக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டியது.

'கார்' காலத்தினுடைய பதினோராவது நாள் குறிப்பிட்டநேரத்துக்கு மேலாகியும் தெற்குப் பக்கத்திலிருந்து எம்.எஸ்.எக்ஸ் 07423ன் ஒசை கேட்கவில்லை. மழை பெய்து கொண்டிருந்தது. எனக்கு அவசரமாகப் போக வேண்டும். போக வேண்டுமானால் குடையைப் பிடித்துக் கொண்டு நடக்க வேண்டியதுதானே? நடக்க முடியாதவனாக நான்?

ஆனால் அன்று அதுதான் என்னால் முடியவில்லை. 'இதோ வந்துவிடுவாள், இதோ வந்துவிடுவாள்' என்று தெற்கே நோக்கிக் காதைத் தீட்டிக் கொண்டு