பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

480 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

செய்த குற்றத்தைச் சொல்கிறேன். அதைப் பத்து நாள் செய்தது போதும், இன்னும் செய்ய வேண்டாம்.”

என்னோடு சிறிதுநேரம் வாதாடிவிட்டுச் சுமதி போய்விடுகிறாள். மழையில் நனைந்து கொண்டு உள்ளிருப்பவளை நனையாமல் காப்பாற்றியவாறு போகும் எம்.எஸ்.எக்ஸ், 07423ஐயும் பார்த்துவிட்டு எந்த மயக்கமும் இல்லாத கெட்டியான மனத்தோடு உள்ளே திரும்புகிறேன் நான்.

ஊரில் 'கார் கால மூட்டம்; - மூன்று மாதத்துக்கு இருந்ததாக எல்லாரும் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் ‘கார்’ கால மயக்கம் பத்தே நாட்களுக்கு மேல் இல்லை. இப்போது எனக்கு அந்த 'லீக்கேஜ்' மனத்தின் எந்த மூலையிலும் இல்லை.

(தாமரை, ஆகஸ்ட், 1961)