பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / பிட்டுத் தோப்பு * 489

எதிரே வடகரையில் மயானத்துக்கு இரண்டு மூன்று கூட்டம் அடுத்தடுத்துப் போயிருந்தது. சிறிது நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக அந்தக் கூட்டங்கள் திரும்பிக் குளிக்கவரலாம் என்ற நைப்பாசையில் பசியோடு காத்துக் கிடந்தான் பரமசிவம். மூன்றில் ஏதாவது ஒரு கூட்டம் தன் ஒடுகால் பக்கம் சாய்ந்தாலும் சுலபமாக இரண்டு ரூபாய் சம்பாதித்து விடலாமே என்ற நம்பிக்கையே அவனை இழுத்து உட்கார்த்தியிருந்தது. அப்போது குஸ்திப் பள்ளிக்கூடத்திலிருந்து சிரிப்பும் அரட்டையுமாக ஒரு ஜமா அட்டகாசத்தோடு வருவதைப் பார்த்துப் பரமசிவம் அதிர்ச்சியடைந்தான். நிலாக் காலமாகையால் அதிக நேரம் குஸ்தி நடத்தி விட்டுக் குளிக்க வந்து கொண்டிருந்தது பாண்டியன் குழு.

அந்தக் குழுவினர் வழக்கம்போல் ஒடுகால் உரிமையாளனாயகி பரமசிவத்தை இலட்சியம் செய்யாமல் குளிக்க இறங்கினார்கள். ஒடுகால் கரையில் குடிசைக்குள்ளே மண்ணெண்ணெய்க் காடா விளக்கின் கரிப் புகையோடு கூடிய சுடர் காற்றில் நடுங்கிக் கொண்டிருந்ததுபோலவே பரமசிவத்தின் உணர்ச்சியும் இந்த அநியாயத்துக்காகச் சில விநாடிகள் கொதித்து நடுங்கி எப்போதும் போலவே உள்ளுக்குள் ஒடுங்கி ஒய்ந்து விட்டது.பாண்டியன் ஆட்களில் சிலர் தண்ணிரில் இறங்கிக் குளித்தும் இன்னும் சிலர் வாளிகளை எடுத்துக்கொண்டு தோய்க்கும் கற்களை ஆக்கிரமித்தும், முழு ஒடுகாலையும் தங்கள் ஆதிபத்தியத்தில் வைத்திருந்த சமயத்தில் இருபது முப்பது மனிதர்கள் அடங்கிய கூட்டம் ஒன்று மயானத்திலிருந்து திரும்பியது.

"ஐயா வாங்க. தண்ணி சுத்தமா வச்சிருக்கேன். காலையிலே இறச்சப் பெறவு ஊறினது” என்று அந்தக் கூட்டத்தை வரவேற்றான் பரமசிவம்.

அவர்களும் அவன் ஒடுகாலை நாடியே வந்தார்கள். ஆனால் அருகில் வந்ததும் மனம் மாறி, "இதென்னப்பா, ஆட்கள் நிறையக் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். வாளி ஒன்றுகூடக் காலியாக இல்லை” என்று சொல்லிவிட்டுப் பக்கத்து ஒடுகாலுக்குப் போய்விட்டார்கள். பெரிய கிராக்கி கைநழுவிப்போன ஏமாற்றத்தில் பரமசிவத்துக்கு அசாத்தியக் கோபம் மூண்டது.

“ஏனய்யா. நீங்களெல்லாம் மனிசங்கதானா? உங்களுக்குச் சூடு, சொரணை, எதினாச்சும் கொஞ்சமாவது இருக்கா? இப்பிடிஎம் பெழைப்பைக் கெடுக்கிறீங்களே, மானமுள்ளவங்களானா வாளியைக் கீழே போட்டிட்டு வெளியேறுங்க”

“யாரைப் பாத்துடாநாக்கு மேலே பல்லைப்போட்டு இப்படிக் கேக்குறே? உங்கள் பாட்டன் வீட்டு ஆறா இது?’ பாண்டியனும் அவன் ஆட்களும் பரமசிவத்தைப் பதிலுக்குக் கண்டபடி பேசிவிட்டார்கள். இரண்டு பக்கமும் வார்த்தை தடித்துவிட்டது.

வேடிக்கை பார்க்கக் கூட்டமும் கூடிவிட்டது. பக்கத்திலிருந்த மற்ற ஒடுகால்காரர்களுக்குக் குஷி பிறந்துவிட்டது. தங்களுக்குப் பிடிக்காதவன் வம்பில் மாட்டிக்கொண்டால் குஷி பிறக்காதாபின்னே? அவ்வளவு பேரும்பாண்டியன் பக்கம். பரமசிவம் தனி ஆள். எல்லாரும் சேர்ந்துகொண்டு பரமசிவத்தை அழ