பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முதல் தொகுதி / இவரும் ஒரு பிரமுகர்! * 505

வீட்டு முன் அறையில் படங்கள் - ஊதுவத்திகள் புலித்தோல்கள் இவை புடைசூழத் தண்டு கமண்டல திரிசூலதாரியாய் நித்தியானந்தம் ஏதோ சிவபெருமான் மாதிரி உட்கார்ந்திருந்தார். சீடப்பிள்ளை வருகிறவர்களை வரிசைப்படுத்தி உட்கார வைத்திருந்தான். மற்றவர்கள் எல்லாரும் தங்கள் எதிர்காலத்தை விசாரித்துக் கொண்டு நகர்ந்தபின் நான் நித்தியானந்தத்தின் எதிர்காலத்தைப் பற்றி விசாரிக்க உள்ளே நுழைந்தேன்.

“எழும்பூர் பிளாட்பாரத்தில் வந்து இறங்குகிறவர்களின் தேவைகளை சென்ட்ரல் பிளாட்பாரத்துக்கு எட்ட விடும் பிரமுகராயிருந்தீர்களே? இப்போது ஏன் திடீரென்று இப்படி ஆகிவிட்டீர்கள் நீங்கள்?’ என்று கேட்டேன்.

நித்தியானந்தம் தம்முடைய மோவாயில் வளர்ந்திருந்த இளந்தாடியை வருடிக் கொண்டே ‘யோகி டிரேட் மார்க் புன்முறுவல் ஒன்று பூத்தார். “லெளகீக வாழ்வு அலுத்துவிட்டது. இப்படி ஆத்மார்த்தமாக ஏதாவது பண்ணலாமென்று இறங்கினேன்!” என்றாரே பார்க்கலாம்.

'லெளகீகத்தின் பேரால் இதுவரை மோசடி செய்தேன்.இனி வைதீகத்தின் பேரால் மோசடி செய்வேன்’ என்று அவரோடு பழகிய எனக்குப் புரியவைத்தன. அவர் வார்த்தைகள். எப்படிப் பிழைத்தால் என்ன? நித்தியானந்தம் தனி மனிதரல்ல. அவரும் அவருடைய ஏற்பாடுகளும் ஒரு தனி ஸ்தாபனம்.அதை யாராலும் அசைக்க முடியாது. திருப்பெருந்திரு. நித்தியானந்தம் யோகியான பிறகு மணிபர்ஸிலிருந்த குப்பைக் காகிதங்களை எடுத்தெறிந்துவிட்டார். தேய்ந்த நாணயத்தோடு தேயாத காசுகளும் அந்த மணிபர்ஸில் இப்ேபது பெருகின. இவையெல்லாம் சேர்ந்து உரசி உரசி நிலையான அந்த நாணயத்தை இன்னும் தேய்த்தன. நித்தியானந்தத்தின் எதிர்காலம் சரியாயிருந்தவரை இந்த யோகம் குறைவின்றி நடந்தது.

ஆறு மாதத்துக்கு அப்புறம் நான் மறுபடி நித்தியானந்ததைச் சந்தித்தபோது, “என்னிடம் சீடனாயிருந்த அயோக்கியப் பயலே, ‘சலகவிதமான இராசி பலனும் கூறப்படும் என்று எதிர்வரிசையில்போர்டுமாட்டிவிட்டான் ஐயா” என்று அலுத்துக் கொண்டார் அவர்.

“உங்கள் ஸ்தாபனத்திலிருந்து ஒரு பிரமுகர் உருவாகிப் புறப்பட்டுப் போனதாக நினைத்துத் திருப்திப்படுங்கள்” என்றேன்.

"அப்படியில்லை சார்பிரமுகர் முக்கியமாகச்செய்யவேண்டிய காரியம் தனக்குக் கீழே தொண்டராக இருக்கிற யாரும் பிரமுகராக உயர்ந்துவிடாமல் கவனித்துக் கொண்டிருப்பதுதான்; அதில் நான் தவறிவிட்டேன்” என்றார்.

“எங்காவது வாய் தவறி உங்கள் சீடனுக்கே அவனுடைய எதிர்காலத்தைப் பற்றி நினைவுபடுத்தியிருப்பீர்கள். அவன் அதைக் கவனிக்கக் கிளம்பிவிட்டான்.”

மறுபடி ஆறுமாதம் கழித்து நான் நித்தியானந்தத்தின் வீட்டுக்குப் போனபோது வாசல்புறமிருந்த அறையில், எதிர்காலம் தெரிய வேண்டுமா? - என்ற போர்டுக்குப்