பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/532

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

530நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

சூபர்வைஸர் போன்ற ஐயாமார்களிடம் ‘ஸ்ட்ராங்’காகச் சொல்லிவிட வேண்டுமென்று சன்னாசி பல நாட்கள் தவித்திருக்கிறான். ஆனால் அது வெறும் தவிப்புத்தான். காரியத்தில் ஒன்றும் நடந்ததில்லை.

“ஏண்டாலே! உனக்கென்ன பெரிய சினிமா ஷ்டாரின்னு நினைப்பாங்கறேன்? தோட்டிப் பயலா லட்சணமாக வந்து நிக்கிறதில்லே. வா, வா, உன்னைக் கவனிக்கிறபடி கவனிக்கிறேன்” என்று வயசுப் பெண்பிள்ளைகளான இளம் தோட்டிப் பெண்களுக்கு முன்னால் மேஸ்திரி தன்னை இறக்கிப் பேசிச் சிரிக்கிறபோதெல்லாம் ‘கடவுளே! இந்த மனிதருடைய வாயிலே பிறக்கிற சாக்கடையை எப்படி அடைப்பது?’ என்று சன்னாசி பலமுறை மனம் கொதித்திருக்கிறான். அந்தக் கொதிப்புக்கு இன்று விடிவு பிறந்துவிட்டது.

சன்னாசி இனிமேல் அப்படிக் கொதிக்க வேண்டிய அவசியமில்லை. நாளைப் பொழுது விடிந்து ‘அது நடந்ததும்’ அவனுடைய ஸ்டேட்டஸ் சேரியில் மட்டுமில்லை இசக்கிமுத்து மேஸ்திரியின் மனத்திலும்கூட உயர்ந்துதான் ஆக வேண்டும். சாதாரணமான விஷயமா என்ன அது?

சாக்கடை கழுவுகிற சன்னாசிக்கும் தன்மானம் உண்டு. இத்தனை பெரிய பட்டினத்தின் அழுக்கைக் கூசாமல் கழுவுகிறவனுக்குப் பெருமைப்பட உரிமையில்லையா என்ன? இந்தர அழுக்கை உண்டாக்குகிற புண்ணியவான்கள் எல்லாம் பெருமையும் கெளரவமும் கொண்டாட முடியுமானால் இதை அருவருப்பில்லாமல் கழுவுகிற கர்மயோகி இன்னும் அதிகமான பெருமையும் கெளரவமும் படலாம்தானே?

“ஐயாவை என்னன்னு நினைச்சே? ஐயா பெருமை வீதியெல்லாம் கொடிகட்டிப் பறக்குமில்லே? நடு ரோட்டிலே குச்சியை நிறுத்திச் சிவப்புத் துணியிலே ‘ரோடு குளோஸ்டு’னு போர்டு மாட்டிக்கிட்டு அண்டர்கிரவுண்டிலே ஹாஃப் டிராயரோட புகுந்துட்டா அப்பறம் நாமதான் ராஜா...” என்று யாருமில்லாத சமயத்தில் சேரிக் கிழவி குப்பச்சியிடம் சன்னாசி தற்சிறப்புப் பாயிரம் படிக்கிற வேளைகளில் அந்தத் தோட்டிக்கும் அசட்டுப் புகழாசை ஒன்று இருப்பது தெரிய வரும்.

இப்போது நிஜமாகவே அந்த அசட்டுப் புகழ் நிரூபணமாகப் போகிறது. தோட்டி சன்னாசிக்கு நல்ல உடம்பு. அகன்ற மார்பும் எடுப்பான தோள்களும் குண்டு முகமும் கருகருவென்ற தலை முடியுமாக ஆள் ராஜா மாதிரி ஜம்மென்றிருப்பான்.இந்த மாதிரி விஷயங்களுக்கு அங்கீகாரம் தருவதில் சேரியின் அதாரிடியான குப்பச்சிக் கிழவியே சொல்லியிருக்கிறாளே!

“போன பெறவியிலே ராசாவாக இருந்திருப்பேடா என் தங்கம்” என்று சன்னாசியைப் பார்க்கும்போது எல்லாம் கைவிரல்களைச் சொடுக்கித் திருஷ்டி முறித்திருக்கிறாள் அந்தக் கிழவி அப்படித் திருஷ்டி கழித்த அழகு வீண் போகுமா, என்ன?

அந்த அதிர்ஷ்டம் அவனைத் தேடிக்கொண்டு வந்தபோது சென்டிரல் ஸ்டேஷன் கடிகாரத்தில் பத்து மணி; பதினைந்து நிமிஷம் ஆகியிருந்தது. அவனுடைய