பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/534

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

532நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

என்று விவரமாகக் கூறவேண்டியவற்றையெல்லாம் கூறி விளக்கிவிட்டு அவன் கையில் பத்துப் புதிய பத்து ரூபாய் நோட்டுக்களை எண்ணி வைத்தார் அவர்.

‘இந்தக் காரியத்தைச் செய்யிறத்துக்கு நூறு ரூபாயா?’ என்று மனத்தில் வியப்புடனே அந்தப் பணத்தைத் தன் அழுக்கடைந்த கையினால் வாங்கி டிராயர் பையில் வைத்துக்கொண்டு சன்னாசி அந்த சினிமா டைரக்டரை ஒரு கேள்வி கேட்டான்:

“ஹீரோ ஹீரோயின் அப்படீன்னா என்னங்க ஸாமி?”

“அதுவா? ஹீரோன்னாக் கதாநாயகன். ஹீரோயின்னாக் கதாநாயகி. அதாவது அவம் பொஞ்சாதி...”

"அப்படீன்னா இதுலே நான்தான் ஹீரோ! இல்லீங்களா?”

"ஆமாம். கொஞ்சம் நாழிகைக்கு நீ தான் ஹீரோ!”

“கொஞ்ச நாழிகைன்னாலும் ஹீரோ ஹீரோதானுங்களே?”

“சந்தேகமில்லாமல் ஹீரோதான்” என்று சொல்லிச் சிரித்தார் டைரக்டர். அவனுடைய குழந்தைத்தனமான இந்தக் கேள்வி அவருக்குச் சிரிப்பு மூட்டிற்று.

“படத்துலே காத்தவராயன் மகன் சன்னாசின்னு எம் பேரைக் காமிப்பீங்களில்லே.?”

“பேர்லே என்னாருக்கு? வேணுமின்னாக் கர்மிச்சாப் போச்சு நாளைக் காலையிலே ரெடியா இரு” மறு நாள் வருவதற்கு அவனுடைய சேரியின் இடத்தை அடையாளம் தெரிந்து கொண்டு டைரக்டர் முதலியவர்கள் புறப்பட்டார்கள்.

இதுதான் சன்னாசியின் வாழ்க்கையில் அன்று நடந்த பெரிய விஷயம். மறு நாள் விடிகிற வரை சேரியின் ‘பிரமுகி’யான குப்பாச்சிக் கிழவியிடம், “ஆயா! உனக்குத் தெரியாது! கொஞ்ச நாழின்னாலும் ஹீரோ ஹீரோதான்” என்று வாய்க்கு வாய் பெருமை பேசிப் பூரித்துக் கொண்டிருந்தான் சன்னாசி.

மறு நாள் விடிந்ததும் காலை ஏழு ஏழரை மணிக்கு ஸ்டூடியோ வேன் வந்து சன்னாசியை அழைத்துக் கொண்டு போய்விட்டது. அவன் வேலை பார்த்த வார்டில் அவனுக்குப் பழக்கமான ஒரு பொது இடத்திலேயே அந்த ஷூட்டிங்குக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். “அண்டர் கிரவுண்டுக்குள் இறங்கிச் சாக்கடை நீரில் நனைந்த கோலத்தோடு மேலே எழுந்தபின் இதோ இந்த இடத்திலே இவங்க நிற்கிற பக்கமாகச் சிரித்தபடி ஒரு தடவை திரும்பிப் பார்க்கணும் நீ” என்று கதாநாயகியாக நடிக்கும் நடிகையை வட்டச்சாக்கடைக் குழிக்கருகே ஓரிடத்தில் நிறுத்தி விட்டுச் சன்னாசிக்குச் சொன்னார் டைரக்டர்.

“இவங்கதான் ஹீரோயினா?” என்று கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாகவே டைரக்டரை ஒரு கேள்வி கேட்டான் சன்னாசி. அவனுடைய இந்தக் கேள்வியைச் செவியுற்று அந்த நடிகை அருவருப்படைந்து முகத்தைச் சுளித்தாள். டைரக்டருக்கும்