பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/555

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————————————————————

முதல் தொகுதி / தர்மோபதேசம்553

கெஜ தூரம் நடந்து வந்து ஏறிக் கொள்கிற மாதிரி இரண்டு கார்களையும் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள். தீட்சிதரின் அருகில் வாய் புதைத்துப் பவ்யமாக உடன் வரும் பெரிய மனிதர்கள் புடைசூழக் காரை நோக்கி அவர் நடந்து வரும் வேளையில் எவரும் எதிர்பாராத விதமாய் முத்துசாமி அவருக்கு முன் பிரவேசித்து விநயமாக வணங்கினான்.அவனுக்குப்பின்னால்பரட்டைத்தலையும் பஞ்சடைந்த கண்களோடு கூடிய முகமும், கிழிசல் புடவையுமாகப் பத்துப் பன்னிரண்டு சேரிப் பெண்களும், குழந்தைகளும் நின்று கொண்டிருந்தார்கள்.

“சுவாமி ஒரு விண்ணப்பம். உங்களுடைய உபன்யாசங்களில் அடிக்கடி சுமங்கலிகளுக்கு வஸ்திரதானம் செய்வதைப் பற்றிச் சொல்லுகிறீர்கள். இதோ இவர்கள்தான் இன்று இந்த தேசத்தில் நிராதரவான சுமங்கலிகள். பத்து மணிக்கு ஒரு பட்டுப்புடவை. மூன்று மணிக்கு ஒரு பட்டுப்புடவை. இரவு ஒன்பது மணிக்கொரு பட்டுப்புடவை என்று கட்டும் பணக்கார சுமங்கலிகளைத்தான் நீங்கள் அதிகமாகச் சந்தித்திருப்பீர்கள்.ஆனால் அவர்கள் தொகை இந்த நாட்டில் மிகவும் குறைவு. இதோ இப்போது என் பின்னால் நின்று கொண்டிருக்கிறார்களே இவர்களைப் போன்ற சுமங்கலிகள்தான் இந்தத் தேசத்திலே இருண்ட குடிசைகளில் ஆயிரம் ஆயிரமாக இருக்கிறார்கள்.இவர்களுக்கு உபகாரம் செய்வதைவிட ஸ்ரீமந் நாராயணமூர்த்திக்குத் திருப்தி தருகிற செயல் வேறொன்றும் இருக்க முடியாது” என்று நிமிர்ந்து நின்று தைரியமாக வேண்டிக் கொண்டான் முத்துசாமி. தீட்சிதரைச் சூழ யக்ஞோபவீததாரிகளாய்ச் சட்டையில்லாமல் (எதையும் சட்டை செய்யாமல்) பக்தி செய்தபடி நின்று கொண்டிருந்த பெரிய மனிதர்கள் முத்துசாமியை முறைத்துப் பார்த்தார்கள்.

“நீங்க என்ன சொல்றேள்?... எனக்குப் புரியறாப்லே இன்னொரு தரம் சொல்லுங்கோ...” என்று முத்துசாமியைக் கேட்டார் தீட்சிதர்.

“சுமங்கலிக்கு வஸ்திரதானம் பண்ணினா சோமயாகம் செய்த பலன் சித்திக்கும்னு நீங்க தினம் சொல்லியதைக் கேட்டேன். இவர்களும் சுமங்கலிகள்தாம். மானத்தை மறைக்கக்கூடத் துணியில்லாமல் கிழிசலும் கந்தையுமாகக் கஷ்டப்படுகிறார்கள்...”

“நா சொன்னது உத்தம ஜாதி ஸ்திரீகளா உள்ளவாளைப் பத்தின்னா...அதம ஜாதி ஸ்திரீகளுக்குத் தானம் செய்தா சோமயாகப் பலன் கிடைக்காதோன்னோ?...”

முத்துசாமி சிரித்தான்! அவனுடைய சிரிப்பில் ஏளனம் ஒலித்தது.

“மன்னிக்கனும் சுவாமி! வறுமையாலும், வாழ்க்கை வேதனைகளாலும் கஷ்டப்படுகிறவர்களுடைய கஷ்டங்களைப் புரிந்துகொண்டு இரங்குவதுதான் மிகப் பெரிய ஆஸ்திகத்தன்மை, தர்மத்தைப் பற்றி மேடையில் பேசிவிட்டு வாழ்க்கையில் கடைப்பிடிக்கக் கூசுகிறவர்கள்தான் இன்றைய சமூகத்தில் நாஸ்திகர்கள்... நீங்கள் ஒரு நாஸ்திகர்... கண்டிப்பாக நீங்கள் ஓர் அப்பட்டமான நாஸ்திகர்...” என்று முத்துசாமி இரைந்து கூச்சலிட்டபோது தீட்சிதருக்கு பக்கத்திலிருந்தவர்கள் பயந்து போய்ப் ‘போலீஸ்... போலீஸ்’ என்று கூட்டத்தைக் கண்ட்ரோல் செய்ய வந்திருந்த