பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/578

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

576நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

கரையைப் பார்த்தோம். அங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருந்தது. மோட்டாரிலிருந்த பெட்ரோல் குழாயில் டிரைவர் கிழித்துப் போட்ட நெருப்புக் குச்சி விழுந்து ஒரு பாக உயரத்துக்கு ஒரு தீ ஜ்வாலை எரிந்து கொண்டிருந்தது. அதைக் கண்டு தயங்கி, மிரண்டு ஒரு பூதாகாரமான வேங்கைப் புலி ஓடிக்கொண்டிருந்தது. உயிருக்குயிரான நண்பன் காப்பாற்ற மறுத்த எங்களை, அஜாக்கிரதையால் பெட்ரோலில் விழுந்த ஒரு சிறு நெருப்புக்குச்சி காப்பாற்றிவிட்டது. புலி போன சிறிது நேரத்திற்கெல்லாம் பரமசிவம் படகோடு வந்தார். டிரைவர் அவரை அடிக்கக் கையை ஓங்கிவிட்டான்; நான்தான் தடுத்தேன். பின்பு எப்படியோ நாங்கள் எல்லாரும் இரவு இரண்டு மணிக்குத் திரும்பிவந்து சேர்ந்தோம்.

4

றுநாள் காலையிலேயே நான் சொல்லாமல் ஊர் கிளம்பிவிட்டேன். இந்த உலகத்தில் நட்பைவிட, மானத்தைவிட - ஏன்? எல்லாவற்றையும்விட பெரிய விஷயம் ஒன்று இருக்கிறது. அதுதான் சொந்த உயிர் இது எனக்குப்புரிந்து விட்டது! எப்போது தெரியுமா? அந்த மங்கிய நிலா இரவில்தான்! சந்தர்ப்பம் அளித்த பாடம் அது.

(1963-க்கு முன்)