பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/618

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

616நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


நீலம்மாள் கதை, ‘அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதையாக முடிந்ததே’ என்று வருந்தினர் பஞ்சாயத்தார். நீலம்மாளே விரும்பி வந்தாலும், அவள் தனக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டான் வீரநாராயணன். பஞ்சாயத்தார் தீர்ப்புக் கூற இனி என்ன இருக்கிறது? கூற வேண்டியதைத்தான், பாம்புகள் கூறிவிட்டனவே.

பூசாரி மறுபடியும் சந்நிதியின் கதவைத் திறந்து, சூடம் கொளுத்திக் காட்டினான். இரண்டு பாம்புகளும் அம்மனுடைய தலையில் கிரீடம் வைத்ததுபோலப் பிணைந்து ஆடிக்கொண்டிருந்தன. நியாயத்தின் இருப்பிடம் அந்தத் தலைதானோ என்னவோ?

(1963-க்கு முன்)