பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்




'வயிற்றிலேயே இறந்து போய்த்தான்.”

என்னைச் சுற்றிலும் ஒரே இருள்! கோவென்று கதறினேன். கார் என்னைச் சுமந்து கொண்டு அடையாற்றின் ஒரு கோடிக்கு ஓடியது.

அங்கே? என் உள்ளங் கவர்ந்த பொன்னுடல் நெருப்பாகிப் புகையாகி எரிந்து கொண்டிருந்தது! அடி நாசகாரி! நீ எரிந்து கொண்டிருந்தாய். என் இதயத்தையும் எரிய வைத்துவிட்டு எரிந்து கொண்டிருந்தாய்.

தொலைவில் அலைபட்ட கடலுக்கு மேல் ஏதோ ஒரு கப்பல் துறைமுகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. கடற்கரை இருளின் நடுவே தட்டுத்தடுமாறி எழுந்து நடக்கிறேன். அங்கே கடலின் அலைகள். அலைகளின் மேல் கப்பல். கப்பலின் மேல் மனிதர்கள். இங்கே என் இதயக் கடலில் எண்ண அலைகள்! அடி மாலா! அதன் மேல் நீங்காது மிதப்பவள் யார் தெரியுமா? நீதானடி நான் கை முடவனாக மட்டும் இருந்தேன். இதயத்தையும் முடமாக்கிவிட்டுப் போய்விட்டாய்! அடி மாலா!

(கலாவல்லி, ஜனவரி - 1, 1957)