பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : பிரதிபிம்பம்

729

“ஏன் அக்கா அந்தப் பேட்டி வேணாம்னீங்க?” என்றாள் ஜெயமாலா,

“பேட்டியா அது? அதை யாராவது படிச்சா, என் வயிற்றெரிச்சல்தான் அதில் தெரியும்”

ஜெயமாலா பதில் சொல்லாமல் சிரித்தாள். “ஏன் சிரிக்கிறே?”

“ஒண்ணுமில்லே! அந்தப் பேட்டி முடியறப்போ நீங்க ஓர் உயர்ந்த கலைஞர்னு மட்டுமே நினைச்சேன். உங்களை உயர்ந்த மனிதப் பண்புள்ளவங்கன்னும் இப்போ புரிஞ்சுக்கறேன். நாம ரெண்டுபேரும் கலைஞர்கள் என்பதை விட மனிதர்கள் என்பதுதான் நிரந்தரமான உண்மை அக்கா”

“என்னை மன்னிச்சுடும்மா! நான் ஒரே காழ்ப்பு வெறியிலே இருந்தேன். என்னென்னமோ உளறிக் கொட்டினேன்” என்று கூறியபடி கண்களில் நீர் நெகிழ மேனகாதேவி ஜெயமாலாவின் பக்கம் திரும்பிய போது, தற்செயலாக எதிரே நிலைக்கண்ணாடியில் தெரிந்த தன் பிரதிபிம்பத்தைத் தானே பார்த்துக் கொண்டாள். தான் மூத்திருப்பதாகவோ, கிழடு தட்டியிருப்பதாகவோ இப்போது அவளுக்குத் தெரியவில்லை. எப்போது அகங்காரம் அழிகிறதோ, அப்போதுதான் பெண் தாயாகிறாள்.

மூப்பு, துயரம், பகை எல்லாமே சொந்த அகங்காரத்தின் பிரதிபிம்பமாகத்தான் இருக்க வேண்டும் என்று இப்போது மெல்ல மெல்ல அவளுக்குப் புரிந்தாற் போல் இருந்தது. பிறரைப் பொறுத்துக் கொள்ள முடியாத போது ஏற்படுகிற காழ்ப்புணர்ச்சியின் பிரதிபிம்பம்தான் மூப்பாகி விடுமோ என்னவோ? அந்த மூப்பு இப்போது அவளிடம் இல்லை.

(அமுதசுரபி, தீபாவளி மலர், 1964)